ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு மிக பெரிய பொக்கிஷம் தான்.இந்தியாவில் டாப் 5 இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் இதுவரை பல முன்னணி நடிகர்களை வைத்து 12 படங்களை இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்த ஷங்கர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் கூட நடித்துள்ளார். ஜென்டில் மேன் படத்தின் மூலம் அறிமுகமான ஷங்கர் தற்போது வரை பல வெற்றிபடங்களை இயக்கி இருக்கிறார்.
தற்போது 57 வயதாகும் ஷங்கர் ஈஸ்வரி என்ற பெண்ணை பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். ஷங்கருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர்.மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர், இளைய மகள் அதிதி ஷங்கர், மற்றும் மகன் அர்ஜித் ஷங்கர் .இதில் இரண்டு மகள்களுமே மருத்துவம் படித்தவர்கள். டாக்டரான ஐஸ்வர்யா ஷங்கர், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் :
தமிழ்நாடு பிரிமியர் லீகில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரும் தொழிலதிபருமான தாமோதரனின் மகன்தான் இந்த ரோஹித் என்பது குறிப்பிடத்தக்கது. 29 வயதான ரோஹித், தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்குள் விளையாட இடம்கிடைக்காததால் 2015-ல் இலங்கைக்குச் சென்றுவிளையாடியவர். அதன்பிறகு புதுச்சேரி ரஞ்சி அணி கேப்டனாகவும் மாறினார் ரோஹித்.
திருமண வரவேற்பு :
ஐஸ்வர்யா – ரோஹித் திருமணம் 2021 ஆண்டு கடந்த ஜூன் 27, அன்று மகாபலிபுரத்தில் படு பிரமாண்டமாக நடைபெற்றது. .கொரோனா உச்சத்தில் இருந்த அந்த சமயத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டிருந்தது. இதனால் அத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். கொரோனா குறைந்து ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதும் சென்னையில் திருமண வரவேற்பு நடத்தப்படும் என அப்போதே கூறப்பட்டது.
திடீர் ஒத்தி வைப்பு :
அதற்கேற்றபடி வரும் மே 1-ம் தேதி ஐஸ்வர்யா – ரோஹித்தின் திருமண வரவேற்பு சென்னையில் நடக்க இருந்தது. இதற்காக ஷங்கரும் அவரது மனைவியும் திரையுலகினரை சந்தித்து அழைப்பிதழ்களை வழங்கி வந்தனர். ஆனால் இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் திடீரென இந்த நிகழ்ச்சி இப்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணம் எனன் என்று தெரியவில்லை.