இந்தியன் 2, விவேக் விஷயத்தில் எடுத்த முடிவை கைவிட்டு, பொருத்தமான நபரை தேடி வரும் ஷங்கர்.

0
414
indian
- Advertisement -

மறைந்த நடிகர் விவேக்கின் கடைசி ஆசையை இயக்குனர் சங்கர் நிறைவேற்றுவாரா? இந்தியன் 2 படம் குறித்த புதிய அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்று என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக். இவர் 1990களின் தொடக்கத்தில் காமெடி நடிகராக திரையுலகத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

-விளம்பரம்-

பின் ஹீரோவாகவும் இவர் சில படங்களில் நடித்திருந்தார். அதோடு இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் இருந்தார். அதிலும் இவர் மறைந்த அப்துல்கலாமின் தீவிர ரசிகர். அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக இவர் லட்ச கணக்கான மரங்களை நட்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் 1 கோடி மரங்களை நடுவது தான் இவரின் கனவாக இருந்தது. ஆனால், கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

- Advertisement -

விவேக் மரணம்:

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருந்தது. கடைசியாக இயக்குனர் சுந்தர் சியின் இயக்கத்தில் ஆர்யா நடித்து இருந்த அரண்மனை 3 திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் விவேக் மறைவுக்கு பின் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக்கின் கடைசி ஆசையை இயக்குனர் சங்கர் நிறைவேற்றுவது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்தியன் 2 படம்:

தமிழ் சினிமா உலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த படம் “இந்தியன்”. இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் 25 வருடங்களுக்கு பிறகு உருவாகி வந்தது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். வெற்றிகரமாக படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.

-விளம்பரம்-

விவேக்கின் கடைசி ஆசை:

மேலும், இந்த படத்தில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். அதேபோல் இந்த படத்தில் விவேக் நடிக்க இருந்தது. அது மட்டும் இல்லாமல் தமிழ் திரை உலகின் பல பிரபலங்களுடன் விவேக் நடித்திருந்தாலும் கமலஹாசன் உடன் ஒரு படத்தில் கூட சேர்ந்து நடிக்க வில்லையாம். ஆகவே கமலஹாசன் உடன் ஒரு படத்தில் ஆவது நடித்து விட வேண்டும் என்று பல மேடைகளில் விவேக் கூறியிருந்தார். அதனுடைய ஒரு வாய்ப்பாக தான் இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்த இருந்தது. இந்தியன் 2 படத்தில் விவேக் சில முக்கிய காட்சிகளில் நடித்திருந்தார். ஆனால், திடீரென பல பிரச்சினைகளால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு விவேக் மாரடைப்பு காரணமாக காலமாகி விட்டார்.

இந்தியன் 2 படத்தின் புதிய அப்டேட்:

இந்த நிலையில் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனால் விவேக் நடித்த காட்சிகள் நீக்கி அவருக்கு பதில் வேறொரு குரு சோமசுந்தரம் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்தியன் 2 படம் குறித்து புதிய அப்டேட் வந்து உள்ளது. அதாவது, விவேக்கின் கடைசி ஆசையை நிறைவேற்ற பட குழுவினர் முடிவு செய்து இருக்கிறது. விவேக்கின் காட்சிகள் படத்தில் இடம்பெறும் என்று கூறுகிறார்கள். விவேக்கின் குரலுக்காக சரியான டப்பிங் கலைஞரையும் தேடி வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் விவேக்கின் கடைசி ஆசையை இயக்குனர் சங்கர் நிறைவேற்றுவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement