அந்த நாவல அவர் எடுக்க போறாரு wait பண்ணி பாருங்க – விக்ரம், மணிரத்னம் கொடுத்த செம அப்டேட்.

0
639
shankar
- Advertisement -

வேள்பாரி படம் குறித்து மணிரத்தினம் அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். மேலும், இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். மேலும், இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம் :

இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பொன்னியின் செல்வன் ரசிகர்கள் பலரும் மிகவும் எதிர்பார்த்து வருகிறார்கள். இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்து இருக்கிறது. இதனிடையே கடந்த 20 ஆம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இசை வெளியீட்டு விழா:

மேலும், இந்த பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்று இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், சிம்பு, இயக்குனர் பாரதிராஜா, கமலஹாசன் போன்ற பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-

பிரஸ் மீட்:

மேலும், சமீபத்தில் இந்த படத்தினுடைய பிரஸ்மீட் சென்னையில் நடந்தது. இதில் பொன்னியின் செல்வன் படக்குழுவினரிடம் பல கேள்விகள் கேட்டிருந்தார்கள். அதற்கு அவர்களும் அழகாக பதில் அளித்து இருந்தார்கள். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், பொன்னியின் செல்வன் போல் வேள்பாரி கதையும் படமாக திரையில் வருமா? என்று கேட்டிருந்தார்.

வேள்பாரி படம்:

அதற்கு இயக்குனர் மணிரத்தினம், என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் அதற்கான முயற்சியில் இருக்கிறார் என்று கூறினார். உடனே அருகில் இருந்த நடிகர் விக்ரம், சங்கர் சார் இந்த படத்தை இயக்குவார் போல இருக்கிறது என்று கூறினார். இதன் மூலம் இயக்குனர் சங்கர் தான் வேள்பாரி கதையை படமாக இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Advertisement