முன்பு தந்தை இப்போது மகனா.! ஷங்கர் இயக்கத்தில் மாஸ் ஹீரோவின் மகன்.!

0
699
shankar
- Advertisement -

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் பல பிரம்மாண்ட படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் பேசப்பட்டது. தற்போது கமலை வைத்து ‘இந்தியன் 2’படத்தைஇயக்கி வருகிறார்.

-விளம்பரம்-
dhuruv

இந்தியன் 2 படத்திற்கு பின்னர் ஷங்கர் யாரை வைத்து இயக்க போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி நிலவி வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்ற சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

விக்ரமனின் மகன் துருவ் தற்போது பாலா இயக்கியுள்ள ‘வர்மா’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தனது இரண்டாவது படத்திலேயே ஷங்கர் இயக்கத்தில் வாய்ப்பு கிடைத்தால் அது துருவுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம் தான்.

ஷங்கர், துருவின் தந்தையான விக்ரமை வைத்து ‘அந்நியன்’, ‘ஐ’ என்ற இரண்டு படங்களை இயக்கி விட்டார். அதே போல ‘பாய்ஸ்’ படத்திற்கு பின்னர் நடிகர் ஷங்கர் புதுமுகங்களை வைத்து படம் இயக்கவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், ஷங்கர் -துருவ் கூட்டணியில் படம் உருவாக இருப்பது தற்போதைக்கு வதந்தி என்று தான் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement