ஃபாரினில் சுத்தி பாக்கறதுக்காக ஷூட்டிங் போறது இல்ல – வெளிநாடுகளுக்கு ஷூட்டிங் செல்லும் காரணம் குறித்து சொன்ன ஷங்கர்.

0
478
Shankar
- Advertisement -

ஃபாரினில் பாடல்களை ஷூட் செய்ததற்கு இதுதான் காரணம் என்று இயக்குனர் ஷங்கர் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரமாண்டம் என்றால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது இயக்குனர் ஷங்கர் தான். சினிமாவில் படங்களை இயக்குவதில் தனக்கென ஒரு பாதையையும், கதைக் களத்தையும் கொண்டவர். இவருடைய படங்கள் எல்லாம் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் அளவில் இருக்கும்.

-விளம்பரம்-

அது மட்டுமில்லாமல் ஷங்கர் படத்துக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றும் சொல்லலாம்.
இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் தற்போது தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் சினிமாவில் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இவருடைய படங்கள் எல்லாமே தொழில்நுட்ப நுண்ணறிவும், பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றம், மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வரும் மாற்றம், கருத்துக்கள், படத்தில் காட்டப்படும் இடங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம்.

- Advertisement -

பிரம்மாண்டத்திற்க்கு பெயர் போன சங்கர் :

அவருடைய படங்கள் எல்லாமே வித்தியாசமான முயற்சிகளிலும், புதுப்புது படைப்புகளாக பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கும் என்பது அனைவர்க்கும் தெரியும். இவர் சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அதோடு இவர் உதவி இயக்குனராக இருந்த போது படத்தில் சில காட்சியில் நடித்தும் இருக்கிறார். பின் இவர் 1993 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த “ஜென்டில்மேன்” என்ற படத்தை இயக்கி இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

அதன் பின் இவர் பல படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது இவர் கமலஹாசனை வைத்து இந்தியன் 2 என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு மீண்டும் துவங்கி இருக்கிறது. தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதே போல் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து இவர் கேம் சேஞ்சர் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களின் வேலைகளிலும் சங்கர் பிசியாக பணியாற்றி வருகிறார்.

-விளம்பரம்-

சங்கர் அளித்த பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் சங்கர் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவரிடம், நீங்கள் வெளிநாடு இடங்களில் பாடல் காட்சிகள் எடுப்பதற்கு காரணம் என்ன? என்று கேட்டிருந்தார்கள். அதற்கு சங்கர், தயாரிப்பாளர் பணத்தில் வெளிநாட்டை சுற்றி பார்க்க வேண்டும் என்று நான் செய்யவில்லை. இந்தியன் படத்தில் மனிஷா கொய்ராலா ப்ளூ கிராஸ் மெம்பர். உயிரினங்களை விரும்புபவர். அதனால் டெலிபோன் மணிபோல் பாடலை வெறும் மிருகங்கள் மட்டுமே வைத்து காட்சிப்படுத்தவே ஸ்கிரிப்ட் எழுதினேன். ஆனால், ஏ ஆர் ரகுமான் பாடலை அதிகமான பீட்ஸ் உடன் கொடுத்துவிட்டார்.

வெளிநாடு பாடல் காட்சிக்கு இது தான் காரணம்:

அந்த பீட்ஸ்க்கு வெறும் பிராணிகளை மட்டும் காட்சிப்படுத்தினால் செட்டாகாது. இதனால் பிராணிகள் மற்றும் டான்ஸ் இரண்டையும் மிக்ஸ் பண்ணி எடுத்தோம். முடிந்த வரைக்கும் கதைக்கு உண்மையாக எந்த மாதிரியான இடங்களில் படமாக்க வேண்டும் என்று நினைத்து தான் படம் ஆக்கினோம். ஆனால், முதல்வன் படத்தில் வெளிநாடு செல்வது போன்ற கதை இல்லை. ஆனால், படத்தின் கிளைமாக்ஸ் பாடலை தேனியில் வைத்து படமாக்கினோம். பாடலுக்காக வெளிநாடு போய்விட வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. கதைக்கு தேவை என்றால் மட்டுமே அதை செய்வேன். வெளிநாடுகளில் நாம் பார்க்காத இடம் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது. அதை பார்த்துவிடலாம் என்று நினைத்து எதையும் செய்வதில்லை என்று கூறி இருக்கிறார்.

Advertisement