‘மன உளைச்சலிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்’ – போக்ஸோ வழக்கில் சிக்கிய சங்கர் மருமகனின் உருக்கமான பதிவு.

0
1258
shankar
- Advertisement -

புதுச்சேரி பெண் பாலியல் வழக்கு தொடர்பாக சங்கர் மருமகன் பதிவிட்டு உள்ள போஸ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்டம் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சங்கர் தான். இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மாண்டமாகவும், பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையிலும் இருக்கும். மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த தாமோதரன் என்பவரின் மகன் ரோஹித் என்பவருக்கும், இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இயக்குனர் ஷங்கரின் மருமகன் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட தகவல் சமூகவலைத்தளங்களில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனும், மதுரை பாந்தர் கிரிக்கெட் அணியின் உரிமையாளரின் மகன் தான் ரோகித் தாமோதரன். புதுச்சேரியில் அரசு பள்ளி மைதானத்தில் மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது கிரிக்கெட் வீரர் தாமரைக்கண்ணன் என்பவர் 16 வயது மாணவிக்கு பயிற்சி அளிக்கும்போது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு இருக்கிறார்.

- Advertisement -

புதுச்சேரி பெண் பாலியல் விவகாரம்:

பாதிக்கப்பட்ட சிறுமி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் புகார் செய்து இருந்தார். ஆனால், சங்க நிர்வாகிகள் பயிற்சி அளிக்கும் நபரிடம் மோதல் வேண்டாம் அனுசரித்து போ என்று கூறி இருந்தார்கள். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவி குழந்தைகள் நல குழுவிடம் புகார் செய்தார். இதையடுத்து குழந்தைகள் நல குழுவினர் விசாரணை நடத்தி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்து இருந்தார்கள். புகாரின் பேரில் மாணவி கிரிக்கெட் விளையாட பயிற்சி அளித்த கிரிக்கெட் வீரர் தாமரைக்கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ரோகித் மீது போக்சோ வழக்கு:

பின் கிரிக்கெட் வீரர் செய்த தவறுக்கு நடவடிக்கை எடுக்காமல் சாதகமாக செயல்பட்டதாக மற்றொரு கிரிக்கெட் வீரர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்க தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் உட்பட 5 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பியிருந்தது. பின் இது குறித்து நீண்ட நாட்கள் எதுவும் பேசாமல் இருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக ரோகித் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

ரோகித் பதிவு:

அதில் அவர், நான் ரொம்ப ஆழமாகவும், போதுமான அளவு யோசித்தும் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். எனக்கான அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கொடுத்து நான் யார் என்று எனக்கே அறிமுகப்படுத்தியதும், வாழ்வின் சிறந்த துணையாக இருப்பதும் கிரிக்கெட் தான். என் வாழ்வின் முக்கிய அங்கமாக இருக்கும் கிரிக்கெட்டுக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், கடந்த சில மாதங்களில் நடந்த சம்பவங்களால் எனக்கான துறையில் எனது மன அமைதியையும் அதற்கான மதிப்பையும் இழந்திருக்கிறேன்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ரோகித்:

இதனால் மிகுந்த துன்பத்திலும், மன உளைச்சலிலும் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர என்னை நானே தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். எனவே தற்காலிகமாகக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற நினைக்கிறேன். இத்தனை அவதூறுகளிலும் எனக்கு ஆதரவாக நின்ற மனிதர்களுக்கு எனது நன்றிகள். நான் மீண்டும் சரியான நேரத்தில் வருவேன். என்னை உருவாக்கிய கிரிக்கெட்டிற்கும், என்னை நம்பி என்னுடன் நின்றவர்களுக்கும் எனது அன்பும் நன்றியும் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement