ஷங்கருக்காக இசையமைத்த இளையராஜா.! இதுவரை வெளிவராத பல நாள் ரகசியம்.!

0
777
Shankar
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை எடுத்தவர் இயக்குனர் ஷங்கர். அர்ஜின் நடிப்பில்வெளியான ‘ஜென்டில்மேன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சங்கர். இதுவரை சங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

-விளம்பரம்-

மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் சங்கர். இதுவரை ஷங்கர் இயக்கத்தில் வெளியான படங்களில் ஏ ஆர் ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் இசையமைத்ததில்லை.

- Advertisement -

அவ்வளவு ஏன் சங்கீத உலகின் சக்ரவர்தியான ‘இளையராஜா’ ஷங்கரின் படத்திற்கு இசையமைக்கவில்லை. ஆனால், ஷங்கருக்காக இளையராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இளையராஜாவின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு ‘இளையராஜா 75’ என்ற விழா நடத்தபட்டது.

இந்த விழாவில் பல்வேறு திரைத்துறை கலைஞ்சர்கள் பங்குபெற்றனர். இந்த விழாவில் ஷங்கரும் பங்கேற்றிருந்தார். இந்த விழாவில் பேசிய அவர், ஜென்டில்மேன் படத்திற்கு இளையராஜா அவர்கள் இசையமைக்க வேண்டும் என முடிவு செய்தேன், அவரை சந்திக்க அனுமதியும் பெற்றேன்.

-விளம்பரம்-

ஆனால் அவர் மீது பயம், எப்படி வேலை செய்வது என்பதால் அதன் பின்னர் சந்திக்கவில்லை. பின்னர் சிறிது காலம் கழித்து அரசுக்காக நான் இயக்கிய வருமான வரி விழிப்புணர்பு விளம்பர படம் ஒன்றிற்கு இளையராஜா தான் இசையமைத்தார், அதில் கமல் நடித்திருந்தார் என்று கூறியுள்ளார்.

Advertisement