ஷங்கரின் மருமகன் மீது போக்சோ ஏன்? – எஃப்.ஐ.ஆர் முழு விவரம். 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் இவர் தான்.

0
1501
shankar
- Advertisement -

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் திரைப்பட இயக்குனர் சங்கரின் மருமகன் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான முழு தகவல்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளன. புதுச்சேரியில் துத்திப்பட்டு கிராமத்தில் மாணவிகளுக்கு கிரிக்கெட் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு கிரிக்கெட் பயிற்சிக்கு சென்ற 17 வயது சிறுமிக்கு கிரிக்கெட் பயிற்சியாளர் தாமரைக் கண்ணன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்திருக்கிறார். இதுகுறித்து கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். ஆனால், கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் அனுசரித்துச் செல் என்று சொல்லி அந்த பெண் கொடுத்த புகாரை ஏற்க வில்லை.

-விளம்பரம்-
தாமரைக் கண்ணன்

அதனால் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தை நல பாதுகாப்பு குழுவிடம் அந்த சிறுமி புகார் அளித்துள்ளார். அந்த சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் பயிற்சியாளர்கள் தாமரைக்கண்ணன், ஜெயக்குமார், கிரிக்கெட் சங்கத் தலைவர் தாமோதரன், அவரின் மகன் ரோஹித் (இயக்குநர் ஷங்கரின் மருமகன்) இணைச் செயலாளர் வெங்கட் உள்ளிட்ட ஐந்து பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்தது. இந்நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமையை அந்த பெண் கூறி உள்ளார்.

இதையும் பாருங்க : ‘கமல் அவனுக்கு செம செருப்படி கொடுத்தார்’ – வீடியோவை பகிர்ந்த நாடியா (செம கான்டுல இருப்பார் போல)

- Advertisement -

அதை எப்ஐஆர்ராக பதிவு செய்து போலீஸ் தீவிர விசாரணை செய்து வருகிறது. அதில் அந்த சிறுமி கூறியது, என்னுடைய பெயர் ரூபா. எனக்கு 16 வயது ஆகிறது. தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறேன். புதுச்சேரியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறேன். கிரிக்கெட் அகடமியில் இருந்து ஜெயக்குமார் என்பவர் தான் எங்களுக்கு பயிற்சி அளித்து வருவார். அவர் காலையில் மட்டும் தான் வருவார். அதனால் அங்கிருந்த சீனியர் பிளேயர் தாமரை கண்ணன் என்பவர் தான் மீதி நேரம் எங்களுக்கு பயிற்சி கொடுப்பார். அப்போது அவர் என்னுடைய உடலின் அந்தரங்கப் பகுதிகளில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

போக்சோ

நான் என்னிடம் இப்படி எல்லாம் நடக்காதீர்கள் என்று எச்சரித்தேன். இந்த சம்பவம் குறித்து பயிற்சியாளர் ஜெயக்குமாரிடம் இரண்டு முறை புகார் செய்தேன். ஆனால், அவர் அதை கண்டுகொள்ளவே இல்லை. அதனால் தாமரைக்கண்ணன் மீண்டும் மீண்டும் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தான். என் மீது பந்து வீசுவது போன்ற தேவையில்லாத தீய செயல்களை செய்து வந்தார். இதனால் கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரியின் கேப்டன் ரோகித் அண்ணாவை சந்தித்தேன். அப்போது தாமரைக்கண்ணன் என்னிடம் தவறாக நடந்தது குறித்து கூறினேன். ஆனால், அவர் இது ஒரு பெரிய விஷயம் இல்லை.

-விளம்பரம்-

இங்கு விளையாடும் அனைத்து பெண்களும் இப்படியான தொல்லைகளை தாண்டி தான் வருகிறார்கள். நீ அனுசரித்து போ என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார். சில நாட்கள் கழித்து தாமரைக்கண்ணன் எனக்கு தவறான எஸ்எம்எஸ்களை அனுப்பினார். அதில் அவர் தன் மனைவி கர்ப்பமாக இருப்பதால் அவருடன் நெருக்கமாக இருக்க முடியாததால் என்னை காதலிப்பதாகவும் எனக்கும் அவர்கருக்கும் உள்ள உறவு அண்ணன் தங்கை உறவு இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர் கூறுவதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் எனக்கு பயிற்சி கொடுக்க மாட்டேன் என்றும் என்னை மிரட்டினார்.

புதுச்சேரி துத்திப்பட்டிலுள்ள சீசெம் கிரிக்கெட் மைதானம்

இதுபற்றி வீட்டில் தெரிவித்தால் என்னை விளையாட அனுமதிக்க மாட்டார்கள் என்ற பயத்தால் அம்மா அப்பாவிடம் எதுவும் சொல்லவில்லை. பின் நான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் புகார் அளித்தேன். யாரும் கண்டுகொள்ளவில்லை. மேலும், எங்களை மிரட்டினார்கள். எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் 1098 போனுக்கு கால் செய்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் புகார் அளித்தேன். அவர்கள் என் புகாரை ஏற்று நடவடிக்கை எடுத்தார்கள் என்று கூறியிருந்தார். தற்போது அந்த ஐந்து பேருமே தலைமறைவாக இருக்கிறார்கள். போலீசார் அவர்களை தேடி வருகிறது.

Advertisement