‘கமல் அவனுக்கு செம செருப்படி கொடுத்தார்’ – வீடியோவை பகிர்ந்த நாடியா (செம கான்டுல இருப்பார் போல)

0
42076
nadia
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தான் கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களை களம் இறங்கி இருந்தார்கள். அதிலும் தமிழ் பிக்பாஸில் முதல்முறையாக திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார்கள். ஆனால், சில நாட்களிலேயே அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது அனைவருக்குமே தெரிந்தது. மேலும், இந்த முறை பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த மலேசியா தமிழர் நாடியா சேங். இவர் மலேசியாவிலேயே சீரியல், மாடலிங், விளம்பரம் என பல துறைகளில் பங்கு பெற்று வருகிறார்.

-விளம்பரம்-

மலேசியாவில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் மலேசியாவிலிருந்து முகேன் கலந்திருந்தார். முகென் தான் கடந்த ஆண்டு பிக் பாஸ் டைட்டில் வின்னர். அதேபோல் இந்த முறையும் மலேசியாவில் இருந்து கலந்துகொண்ட நதியா சாங்க் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பார் என்று எதிரிபார்க்கப்பட்டது.

இதையும் பாருங்க : தனது அம்மா தனக்கு கூறிய அறிவுரை – இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள சமந்தா.

- Advertisement -

ஆனால், துருதிஷ்டவசமாக முதல் வாரத்திலேயே எலிமினேஷன் செய்யப்பட்டு நதியா சாங்க் வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேறியதற்கு முக்கிய காரணமே அபிஷேக் தான். நாடியா வெளியேறிய அந்த வாரம், அவரை அபிஷேக் ஒருவர் மட்டும் தான் நாமினேட் செய்து இருந்தார். இதனாலேயே அபிஷேக் மீது செம காண்டில் இருக்கிறார் நாடியா. இப்படி ஒரு நிலையில் அபிஷேக்கை கேலி செய்யும் வகையில் தன் இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கடந்த வாரம் கமலிடம் பேசிய அபிஷேக், தான் பிக் பாஸே பார்த்தது இல்லை என்று கூறி இருந்தார். ஆனால், நாடியா தான் அடுத்த வனிதா என்றும், மதுதான் இந்த சீசன் லாஸ்லியா என்றும் கூறி இருந்தார். இதையெல்லாம் நேற்று கமல் கேட்டு அபிஷேக்கை வச்சி செய்தார். இப்படி ஒரு நிலையில் அபிஷேக்கை ட்ரோல் செய்த வீடியோவை நாடியா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

அதில் இந்த வீடியோவை பகிர்ந்து உள்ள ரசிகர் ‘கவலைப்படாதீர்கள் நாடியா, உண்மை வெளியே வரும், அவன் பிளான் பண்ணி தான் உங்களை வோட் அவுட் செய்தான். இன்று கமல் சார் அவனுக்கு செருப்படி கொடுத்திருக்கிறார். உலக மகா நடிப்புடா’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனை அப்படியே நாடியா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இன்னும் அபிஷேக் இன்று வெளியேறிய அறிவிப்பிற்கு பின்னர் என்னவெல்லாம் இவர் பதிவிட போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement