மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கொம்பு சீவி. இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்
சரத்குமார் நடித்திருக்கிறார். இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் 70களில் வைகை அணை கட்டுவதற்காக தேனி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களை காலி செய்து அந்த இடத்தை அரசு கைப்பற்றுகிறது. அதனால் அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் பொருளாதார ரீதியாக ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள். இதனால் அதில் சிலர் கஞ்சா கடத்துவது உள்ளிட்ட தவறான செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். வைகை அணைக்கு அருகில் இருக்கும் பகுதியில் இருப்பவர் தான் சரத்குமார். இவர் அந்த ஊரின் உடைய காட்ஃபாதர்ராகவே இருக்கிறார்.
இன்னொரு பக்கம் எந்தத் துணையும் இல்லாமல் தனிமையில் தனித்து நிற்கிறார் ஹீரோ சண்முகபாண்டியன். இவருக்கு சரத்குமார் உதவி செய்கிறார். இதனால் சரத்குமார் உடனே சண்முக பாண்டியன் சேர்ந்து கடத்தல் போன்ற பல வேலைகளில் ஈடுபடுகிறார். பணம் சேர்வது மட்டும் இல்லாமல் காவல் அதிகாரிகள் உடைய பகையும் இவர்களுக்கு அதிகமாக சேருகிறது.

இந்த பிரச்சனைகளை எல்லாம் சரத்குமார்- சண்முக பாண்டியன் இருவரும் எப்படி எதிர்கொண்டார்கள்? ஊர் மக்களுடைய பொருளாதார பிரச்சினை தீர்ந்ததா? என்பதுதான் படத்தினுடைய மீதி கதை. படத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று சொல்லலாம். கோபம், ஆக்சன், பாசம் என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். இவரை அடுத்து படத்தின் இன்னொரு நாயகனாக சரத்குமார் வந்திருக்கிறார்.
இவர் தன்னுடைய கெத்தான உடல் மொழி, கோபம், ஆக்ரோஷமான நடிப்பு என அனைத்திலும் சிறப்பாக செய்திருக்கிறார். சரத்குமார்- சண்முக பாண்டியன் இடையேயான கெமிஸ்ட்ரி படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இந்த படத்தில் முதல் பாதி முழுவதும் ஆக்சன் ஆக சென்று கொண்டிருக்கின்றது. இரண்டாம் பாதி காமெடி, எமோஷன் என்று செல்கிறது. இயக்குனர் கதாபாத்திரங்களை சிறப்பாக வடிவமைத்து இருக்கிறார் என்று சொல்லலாம்.
இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுமே சிறப்பாக தங்களுக்கு கொடுத்த வேலையை செய்து முடித்து இருக்கிறார்கள். ஆனால், படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். இருந்தாலும் கதையை இயக்குனர் நேர்த்தியாக கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார். பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே நன்றாக இருக்கிறது. வரலாற்று உண்மை சம்பவ கதை என்றாலுமே அதில் இயக்குனர் ட்ரெண்டிங்க்கு ஏற்ப காமெடி, சில புதுமைகளையும் புகுத்தியிருப்பது பாராட்டுக்குரிய விஷயம். மொத்தத்தில் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் கொம்பு சீவி இருக்கிறது.

நிறை:
சரத்குமார், சண்முக பாண்டியன் நடிப்பு அருமை
உண்மை சம்பவ கதை
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்
காமெடி காட்சிகள் நன்றாக இருக்கிறது
குறை:
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்
முதல் பாதி பொறுமையாக செல்கிறது
மொத்தத்தில் கொம்பு சீவி - கூர்மை






