வலிமை படம் வந்தப்ப கோமால இருந்தயா ? சாந்தனுவை திட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள் – அவரின் பதிலடியை பாருங்க.

0
536
Shanthanu
- Advertisement -

சமீபத்தில் வெளியான பீஸ்ட் மற்றும் kgf2 படங்களை ஒப்பிட்டு பல விதமான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆரி, இந்த விவகாரம் குறித்து பேசி இருந்தார். அதில் ‘ பீஸ்ட் படம் வெளிவருவதற்கு முன்பே யாஷ், பீஸ்ட் vs கேஜிஎப் 2 கிடையாது. பீஸ்ட் மற்றும் கேஜிஎப் 2 என்று கூறியிருந்தார். இரண்டு படங்களும் வெளிவந்த பிறகு பீஸ்ட் vs கேஜிஎப் 2 என்று பெரிய விமர்சனங்கள் ஆகவே மாறிவிட்டது.சினிமா என்பது திட்டுபவர்களையும் வாழ வைக்கும், பாராட்டுபவர்களையும் வாழவைக்கும். இப்போது திட்டி சம்பாதிக்கிற ஒவ்வொரு பேரும் இந்த சினிமாவை நம்பி தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழ் சினிமாவில் ஒத்த செருப்பு என்ற படம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது.

-விளம்பரம்-

அந்த காலத்திலேயே கமலஹாசன் நாயகன் படம் இன்றும் பேசப்படுகிறது. இப்படி இருக்கும் போது தமிழ் சினிமாவின் தரம் குறைந்து விட்டது என்று சொல்கிறார்கள். தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுக்க முயற்சிக்க வேண்டும் என்றும் சொல்லலாமே தவிர தமிழ் சினிமாவையே மட்டமான படங்கள் தருகிறது என்று குறை சொல்லக் கூடாது.தமிழ் சினிமாவை விமர்சனம் செய்பவர்கள் கூட அதன் மூலம் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இரண்டு வருடங்களாக திரையரங்கள் ஓடாமல் அவ்வளவு திரை அரங்கு ஊழியர்கள் ரொம்ப கஷ்டப்பட்டார்கள்.

- Advertisement -

பீஸ்ட் , Kgf ஒப்பீடு :

ஆனால், தற்போது வெளியாகியுள்ள இரண்டு படங்களும் நன்றாக ஓடி வருகிறது. அந்த இரண்டு படங்களுக்கு வருபவர்களும் காசு கொடுத்துதான் படம் பார்க்கிறார்கள். அதனால் ஒரு படத்தை தாழ்த்திப் பேசுவது இன்னொரு படத்தை புகழ்ந்து பேசுவதும் சரியல்ல. உங்களுக்கு இரண்டு படங்களுமே குழந்தை மாதிரி தான். ஒரு கண்ணுக்கு வெண்ணெய், ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு தடவுவது சரியல்ல.ஒரு படத்தை விமர்சனம் சொல்லாதீர்கள்.

ஆவேசம் அடைந்த ஆரி :

படம் சரியில்லை என்றால் இயக்குனர்களும் படக்குழுவும் சேர்ந்த அதை திருத்தி கொள்வார்கள். இப்படி விமர்சிப்பதன் மூலம் படத்திற்கு உழைத்த அத்தனை நபர்களின் உழைப்பும் வீணாகும். கேஜிஎஃப் போன்ற படங்கள் வெற்றி அடைவது ரொம்ப சந்தோசம் தான். ஆனால், இதற்கு முன்பே நம்முடைய தமிழ் படங்கள் பல சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் படங்களை விமர்சனம் செய்து பல பேரின் உழைப்பையும் வாழ்க்கையையும் வீணடிக்காதீர்கள் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

திட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள் :

ஆரியின் இந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இருவர் ‘தரமான செருப்படி’ என்று கூறி இருந்தார். அவரின் அந்த பதிவை பகிர்ந்த சாந்தனு’சரியாக சொன்ன மச்சி ஆரி’ என்று பதிவிட்டு இருந்தார். சாந்தனுவின் இந்த பதிவை பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் விஜய் படத்துக்கு வந்தா மட்டும் தான் ரத்தம், அஜித் படங்கள் வரும் போது எல்லாம் நீங்கள் எங்கே போனீர்கள் என்று கேள்வி கேட்க துவங்கிவிட்டனர்.

அஜித் ரசிகர்களுக்கு பதில் :

இதற்கு பதில் அளித்த சாந்தனு ‘அஜித் சார Body Shaming பண்ணப்பா நான் அத தவறுன்னு ட்வீட்ல இல்ல, வீடியோ இண்டர்வியூவ்ல கூட கண்டிச்சேன். அப்போ ஒருத்தர் சொன்னார் ‘எதுக்குடா இதல்லாம் பேசுர, நீங என்ன சொன்னாலும் நொட்டம் சொல்ல நாலு பேரு வருவாங்கன்னு” என்று பதிவிட்டுள்ள ஷாந்தனு, ஒரு படைப்பை அல்லது படைப்பாளியை பயங்கரமா விமர்சனம் செய்யுறதுக்கும் இழிவுபடுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது” என்றும் பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement