இந்தியாவில் ஆண்டு தோறும் தேசிய விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு இருந்த தேசிய விருது பட்டியலில் பல்வேறு தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றது. அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷூக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த திரைப்படமாக அசுரன் திரைப்படமும் அறிவிக்கப்பட்டது. அதே போல தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருதும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதே சிறந்த இசையமைப்பாளருக்கான விருது விஸ்வாசம் படத்திற்காக இமானுக்கு வழங்கப்பட்டது. ஆனால், சிறந்த இசையமைப்பாளர் விருதை அசுரன் படத்திற்கு இசையமைத்து இருந்த ஜி வி பிரகாஷுக்கு தான் வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என்று பல மீம்கள் வைரலானது. இப்படி சீரியஸாக தேசிய விருதை பற்றிய பல மீம்கள் வைரலான நிலையில் நடிகர் சாந்தனு பற்றிய மீம்களும் வைரலானது. அதாவது மாஸ்டர் படத்தில் நடித்த சாந்தனுக்கு தான் சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கேலியாக பல மீம்கள் வைரலானது.
இதையும் பாருங்க : அப்போல்லாம் பொண்ணுங்க இடுப்பு 8 மாதிரி இருந்துச்சி – பிரச்சாரத்தில் பேசி சர்ச்சையில் சிக்கிய லியோனி. வீடியோ இதோ.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.
படத்தில் மாளவிகா, ஆண்ட்ரியா, ரம்யா, கௌரி கிஷன், சாந்தனு என்று பலர் நடித்திருந்தாலும் இவர்களுக்கு எல்லாம் படத்தில் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் பல மீம்களை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தில் நடித்த ஷாந்தனுவின் கதாபாத்திரமும் கேலிக்கு உள்ளானது. படத்தில் வந்த பூனை கூட அதிக காட்சியில் வந்தது என்றெல்லாம் கேலி செய்து வந்தனர்.
அந்த வகையில் தேசிய விருது அறிவிக்கப்பட்ட பின்னரும் மாஸ்டர் படத்தில் இவர் நடித்த ‘பார்கவ்’ கதாபாத்திரத்தை கேலி பல மீம்கள் வைரலானது.அதில் ஒரு மீமை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சாந்தனு, அடுத்தவரை கேலி செய்து அதன் மூலம் ஏற்படும் சிறிய மகிழ்ச்சி. இதுபோன்ற கேலிகள் சலித்துவிட்டது. ஆனால், என் மீது கல் எரிந்ததர்க்கும், தெரிந்தும் தெரியாமல் எனக்கு உத்வேகம் கொடுத்ததர்க்கும் நன்றி. இது ஒரு நாள் நடக்கும் அப்போது என்னுடைய பதில் இருக்கும். லவ் – பார்கவ்என்று நம்பிக்கையோடு பதிவிட்டுள்ளார்.