சாந்தனுவை கேலி செய்து மீம் போட்ட மீம் கிரியேட்டர் – சாந்தனுவின் பதிலால் நெகிழ்ந்த ரசிகர்கள்.

0
66290
shanthanu
- Advertisement -

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து உள்ளது. இப்படி ஒரு இந்த படத்துடன் ஒப்பிட்டு சாந்தனுவை கலாய்த்து மீம் ஒன்று வைரலானது.

- Advertisement -

அந்த மீமில் மாஸ்டர் படத்தின் நடித்த மகேந்திரன், சார்பட்டா படத்தில் நடித்த டான்சிங் ரோஸ், ஜகமே தந்திரம் படத்தில் வந்த சிவதாஸ் ஆகியோருடன் மாஸ்டர் படத்தில் நடித்த சாந்தனுவின் பார்கவ் கதாபாத்திரத்தை ஒப்பிட்டு, படத்தில் குறைவாக வந்தாலும், இவர்களின் நடிப்பு பயங்கரம் என்று கூறிப்பிடபட்டு இருந்தது. மேலும், அந்த பதிவியில் இந்த மீம் சாந்தனு தான் போட்டதாக கேலி செய்யப்பட்டு இருந்தது.

இதற்கு பதில் அளித்த சாந்தனு, இந்த மீமை யார் உருவானார்களோ, நீங்கள் சந்தோசமாக இருப்பீர்ககள் என்று நம்புகிறேன் என்று பதில் அளித்துள்ளார். நடிகர் சாந்தனு மாஸ்டர் படத்தில் நடிப்பதற்கு முன்னர் அவரது கதாபாத்திரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் வெளியான பின்னர் அவரது கதாபாத்திரம் பல விதமான ட்ரோல்களுக்கு உள்ளாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement