தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் சாந்தனும் ஒருவர். இவர் பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த “வேட்டிய மடிச்சு கட்டு” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின் இவர் 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது நடிகர் சாந்தனு அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து உள்ள மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவராக நடித்து உள்ளார். நடிகர் சாந்தனு அவர்கள் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=5G8fZeL1SZU
அதுமட்டுமில்லாமல் இந்த லாக்டோன் நேரத்தில் நடிகர் சாந்தனு அவர்கள் தனது மனைவி கீர்த்தியுடன் சேர்ந்து ஒரு குறும்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த குறும்படத்திற்கு KoCoNaKa என்ற பெயரும் வைத்துள்ளார். அந்த குறும்படத்தில் காலையிலிருந்து இரவு வரை ஒரு பெண் தாயாகவும் மனைவியாகவும் படும் கஷ்டத்தையும் அதனால் ஆண்கள் படும் துயரத்தையும் நகைச்சுவை கலந்த கருத்தாக வெளியிட்டிருந்தார்.
தற்போது இந்த குறும் படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த குறும்படத்தை பார்த்து விஜய் அவர்கள் சாந்தனுவை பாராட்டியுள்ளார். முதலில் நடிகர் சாந்தனு அவர்கள் இந்த குறும் படத்தின் டிரைலரை விஜய்க்கு அனுப்பியுள்ளார். அதை பார்த்துவிட்டு விஜய் அவர்கள் அட்ரா அட்ரா.. அதெல்லாம் உண்மை என்று கூறியிருக்கிறார்.
வீடியோவில் 21 : 16 நிமிடத்தில் பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=VX080E75i34
அதிலும் அவர் செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன் செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்கிறவன் தான் புருஷன் என்ற டயலாக் அவருக்கு மிகவும் பிடித்தது ஒன்றாம் என்று கூறியுள்ளார். அதற்கு பிறகு நடிகர் விஜய் அவர்கள் அந்த குறும்படத்தை முழுவதுமாக பார்த்து விட்டு சூப்பர் என்றும் புகழ்ந்துள்ளார். சாந்தனுவின் இந்த குறும்படத்தை ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள்.





