அவங்க மட்டும் சப்போர்ட் பண்ணி இருந்தா என் சினிமா வாழ்க்கை வேற மாதிரி இருந்திருக்கும் – திருமணத்திற்கு பின் பறிபோன சினிமா வாழ்க்கை குறித்து ஷாந்தி பிரியா

0
343
- Advertisement -

பிரபல நடிகை சாந்தி பிரியா சமீபத்தில் அளித்த பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. 1987 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த, ‘ எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நிஷாந்தி எனும் சாந்தி பிரியா. இவன் முதல் படத்திலேயே தமிழ் மக்களின் மத்தியில் தனக்கென்ன ஒரு இடத்தை பிடித்தவர்.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகை பானுப்பிரியாவின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. பின் இவர் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த உடன் ஹிந்தி சீரியல்களில் நடித்தார். மேலும், நடிகர் சித்தார்த் ராய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த சாந்தி பிரியா தனது வாழ்க்கை, கேரியர் மற்றும் திருமணம் போன்ற விஷயங்கள் பற்றி பேசி உள்ளார்.

- Advertisement -

சாந்தி பிரியா பேட்டி :

அதில், ‘தொகுப்பாளர் சித்தார்த் கண்ணன், நீங்கள் ஏன் சன்னி தியோலின் ‘Veerta’ படத்திலிருந்து பாதியில் விலகினீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சாந்தி, ‘அந்த படத்தில் நடிக்கும் போது எனக்கு சொன்ன கதை வேறு, அங்கு நடந்தது வேறு. எனக்கு என்ன கதாபாத்திரம் சொன்னார்களோ அதுபோல் அங்கு இல்லை’ என்று கூறியிருக்கிறார். அதனால் என்னுடைய செக்ரேட்டரியை அழைத்து, இந்த படத்தில் நான் இனி நடிக்கப் போவதில்லை என்று கூறினேன். அதற்குப் பிறகு இதை குறித்து தயாரிப்பாளர் உடன் பேசியபோது நான் சில மிரட்டல்களுக்கும் ஆளானேன் என்று கூறியுள்ளார்.

சினிமாவில் பிரேக் குறித்து :

அதற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகியதற்கும் சாந்தி பிரியா காரணம் கூறியுள்ளார். அதில், முதலில் எனது மாமியார் திருமணத்திற்கு பின்பும் நீ விரும்பினால் நடிக்கலாம். ஆனால் குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆனால் திருமணத்திற்கு பிறகு எனக்கு சரியான சப்போர்ட் கிடைக்கவில்லை. எனது மாமியார் எனக்கு சப்போர்ட் செய்திருந்தால், எனது கேரியர் வேறு மாதிரி இருந்திருக்கும். நான் சினிமாவிலிருந்து விலகி இருக்க மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

அக்ஷய் குமார் குறித்து:

தொடர்ந்து ஒரு பேட்டியில் சாந்தி, நடிகர் அக்ஷய் குமார் உடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதில், அக்ஷயிடம் நான் நடிக்க வாய்ப்பு கேட்டிருந்தேன். அதிலிருந்து என்னிடம் அவர் பேசுவதை நிறுத்தி விட்டார். அதாவது ‘ஹாலிடே’ படத்தின் ஷூட்டிங் இல் நான் அவரை சந்தித்தேன். அப்போதுதான் வாய்ப்பு கேட்டேன். ‘நீங்கள் பார்ப்பதற்கு அதே மாதிரி இருந்தாலும் கூட, உங்களுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காது’ என்று அக்ஷய் சொல்லிவிட்டார் என்று கூறியிருந்தார் சாந்தி.

சாந்தி பிரியா குறித்து:

கடைசியாக 1994 ஆம் ஆண்டு வெளியான ‘Ikke Pe Ikka ‘ என்ற இந்தி படத்தில் தான் சாந்தி பிரியா நடித்திருந்தார். அதற்குப் பிறகு 2022 ல் சரோஜினி நாயுடுவின் பயோபிக் மூலம் கம்பேர் கொடுத்தார். தற்போது இவர் ‘Dharavi Bank’ என்னும் ஹிந்தி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.மேலும், வெற்றிமாறனின் தயாரிப்பில், வர்ஷா பாரத் இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தி பிரியா தமிழில் ரீ என்ட்ரி கொடுப்பதாக கூறப்படுகிறது.

Advertisement