கர்ப்பமாக இருந்த நேரத்தில் கூட அவருக்கு உதவி செய்தேன் அந்த நன்றி கூட அவருக்கு இல்லை- மோகன்லாலை திட்டி தீர்த்த சாந்தி வில்லியம்ஸ்

0
305
- Advertisement -

பிரபல இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையான சாந்தி வில்லியம்ஸ், நடிகர் மோகன்லாலை தாறுமாறாக விமர்சித்த நேர்காணல் ஒன்று வைரலாகியுள்ளது. கேரளாவை பூர்விகமாக கொண்ட சாந்தி வில்லியம்ஸ் தன்னுடைய 12வது வயதில் திரைத் துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

-விளம்பரம்-

மேலும், பல படங்களில் சிறிய சிறிய கேரக்டரில் நடித்த பிரபலமான சாந்தி வில்லியம்ஸ், 2001 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ‘சித்தி’ தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். அதைத் தொடர்ந்து மெட்டி ஒலி, அண்ணாமலை, தென்றல், வாணி ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகு, கண்மணி போன்ற ஹிட் சீரியல்களிலும் கலக்கினார்.

- Advertisement -

சாந்தி வில்லியம்ஸ் நடித்த படங்கள்:

இதுபோல் பல சீரியல்களில் நடித்த சாந்தி வில்லியம்ஸின் முதல் திரைப்படம் 1970 இல் வெளிவந்த ‘வியட்நாம் வீடு’ஆகும். மேலும் ஜென்டில்மேன், பூவே உனக்காக, ஜோடி, சிநேகிதியே, பிரண்ட்ஸ், டும் டும் டும், பூவெல்லாம் உன் வாசம், அந்நியன் போன்ற பிளாக் பஸ்டர் படங்களிலும் நடித்த சாந்தி வில்லியம்ஸ் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள திரை உலகிலும் திறமையை காட்டியவர்.

சாந்தி வில்லியம்ஸின் திருமண வாழ்க்கை:

இவர் 1979 இல் மறைந்த பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் வில்லியம்சை மணந்தது,4 பிள்ளைகளை பெற்றுக் கொண்டார். அதன்பின் சில ஆண்டுகள் முன்பு இவருடைய மகன் மாரடைப்பால் இறந்த போது, ‘இல்லை அவன் மர்மமான முறையில் இறந்து விட்டான்’, என்று கதை கட்டியவர்களை வன்மையாக கண்டித்து இருந்தார் சாந்தி வில்லியம்ஸ். சமீபத்தில் நடிகர் மோகன்லாலை விமர்சித்த சாந்தி,” தான் மோகன்லாலுக்கு நிறைய சமைத்து கொடுத்திருப்பதாகவும் ஆனால் அவருக்கு அந்த நன்றி கொஞ்சம் கூட இல்லை”, என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

மோகன்லால் குறித்து சாந்தி வில்லியம்ஸ்:

மேலும் தனது கணவர் வில்லியம்ஸ் பெரிய கேமரா மேன் , மோகன்லாலின் இரண்டாவது படமான “ஹலோ மெட்ராஸ் கேர்ள்” படத்தை தயாரித்து இயக்கியதும் தனது கணவர் தான் என்றவர் ,அந்த படத்தில் மோகன்லால் வில்லனாகவும், பூர்ணிமா பாக்யராஜ் ,ஊர்வசி ஆகியோரும் நடித்திருப்பார்கள் என்றார். அதை தொடர்ந்து சாந்தி வில்லியம்ஸ், தனது வீட்டிற்கு மோகன்லால் நேரடியாக கேரியர் கொண்டு வந்து, மீன் சமைக்க சொல்லி எடுத்துச் செல்வார் என்றார்.

மோகன்லாலுக்கு மரியாதையே கிடையாது:

தனது கணவர் மோகன்லாலை வைத்து நாலு படங்கள் பண்ணியும், அவர் இறந்தப்ப வராததால் உலகத்திற்கே பிடித்த மோகன்லாலை எனக்கு சுத்தமா பிடிக்காது என்று வேதனையுடன் தெரிவித்திருந்தார். மேலும் நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது மோகன்லாலுக்கு பணம் கொடுக்க என் நகை எல்லாம் விற்றுக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அவரோ ஏர்போர்ட்டில் என்னை பார்த்தால் கூட தலை தெறித்து ஓடுகிறார்.அதனால், ‘அவனுக்கு என்கிட்ட மரியாதையே கிடையாது’ என்று புலம்பிய சாந்தி வில்லியம்ஸ் இப்போது ‘புது வசந்தம்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

Advertisement