என்னை வாழ வைக்கிறேன் என்றார் – மாஜி அமைச்சர் வீட்டின் முன் நாடோடிகள் பட நடிகை தர்ணா.

0
298
Shanthini
- Advertisement -

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டின் முன்பு துணை நடிகை தர்ணா செய்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுக அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் மீது திரைப்பட துணை நடிகை சாந்தினி என்பவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். நடிகை சாந்தினி அளித்த புகாரில், கடந்த ஐந்து வருடங்களாக மணிகண்டனும் நானும் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். இதனால் நான் மூன்று முறை கர்ப்பமாகவும் ஆனேன்.

-விளம்பரம்-

ஆனால், மணிகண்டனுக்கு சில பிரச்சினைகள் இருந்ததால் அந்த கர்ப்பத்தை கலைத்தேன். முதலில் திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு என்னை அவர் தற்போது ஏமாற்றி விட்டார் என்று கூறியிருக்கிறார். இப்படி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அடையார் அனைத்து மகளிர் காவல் துறையினர், சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

- Advertisement -

அமைச்சர் மீது நடிகை கொடுத்த புகார்:

பின் இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்தது. அப்போது சாந்தினி தான் அளித்திருந்த புகாரை திரும்ப பெற்றுவிட்டதாக கூறப்பட்டது. மேலும், மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவு பெற்றிருந்தார்கள். இந்த நிலையில் நடிகை சாந்தினி மணிகண்டன் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, இன்று காலை ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் உள்ள மணிகண்டனின் பெற்றோர் வீட்டுக்கு முன்பு நடிகை சாந்தினி அவர்கள் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

தர்ணா போராட்டத்தில் நடிகை:

பின் மணிகண்டனின் குடும்பத்தினர் சாந்தினியை அடித்து விரட்டி அடித்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து சாந்தினி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இருவருடைய நலன் கருதி பேச்சுவார்த்தை நடந்தது. அதன் அடிப்படையில் என்னுடைய வாழ்க்கையை நாசம் செய்ததற்கு முன்னால் அமைச்சர் மணிகண்டன் அவர்கள் செட்டில்மெண்ட் செய்வதாக எனக்கு ஒப்பந்தம் கொடுத்தார். அதன் அடிப்படையில் தான் நான் வழக்கையும் திரும்ப பெற்றேன்.

-விளம்பரம்-

பேட்டி அளித்த நடிகை:

வழக்கை வாபஸ் வாங்கிய அடுத்த நாளே அவர் தலைமறைவாகிவிட்டார். மூன்று மாதங்களுக்கு மேலாகியும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கு இடையில் ரவுடிகளை வைத்து என்னை மிரட்டுகிறார். என் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி அச்சுறுத்திருக்கிறார். தற்போது அவர் மதுரையில் இருப்பதை பார்த்து விட்டேன். அவரை தொடர்பு கொண்ட போது என்னை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். நான் அவர் வீட்டுக்கு செல்வதற்குள் தலைமறை வாங்கி விட்டார். அவரது தொகுதியை ராமநாதபுரம் என்பதால் இங்கு அவருடைய பெற்றோரின் வீட்டிற்கு வந்திருக்கலாம் என்று கருதி தான் நான் வந்தேன்.

நடிகைக்கு நடந்த சம்பவம்:

ஆனால், அவரின் தாயும் வீட்டில் இருந்தவர்களும் என்னை தாக்கி விரட்டி அடித்தனர். அவர் முதலில் என்னை சந்திக்க வேண்டும். வழக்கை வாபஸ் பெறுவதற்காக அவர் ஒப்புக்கொண்ட நிபந்தனங்களை நிறைவேற்றி தர வேண்டும். அதுவரை நான் இங்கிருந்து செல்ல மாட்டேன். எனக்கு நீதி வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து பஜார் காவல் நிலைய போலீசார் அவரை அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின் நடிகை சாந்தினி மதுரையில் உள்ள மணிகண்டன் வீட்டுக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றார்.

Advertisement