எனக்கு கல்யாணம் ஆகி 3 பசங்க இருக்காங்க – நடிகையின் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர் விளக்கம்.

0
55098
mani
- Advertisement -

தன்னை முன்னாள் அமைச்சர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி தற்போது தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாக நாடோடிகள் பட நடிகை ஷாந்தினி தேவா கூறி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாடோடிகள் படத்தில் பிரபா என்ற கதாபாத்திரத்தில் காதல் ஜோடியாக நடித்தவர் சாந்தினி. மலேசியாவை சேர்ந்த இவர் சென்னையில் தான் தங்கி வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் முன்னால் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

-விளம்பரம்-

மணிகண்டன் தன்னை காதலித்ததாகவும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் சாந்தினி கூறியிருந்தார் மேலும் ஐந்து வருடங்களாக மணிகண்டன் வாழ்ந்துவந்த தான் அவரால் மூன்று முறை கருக்கலைப்பு செய்து இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த நிலையில் அவரது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததாகவும் சாந்தினி கூறியுள்ளார்.

- Advertisement -

ஆனால், இப்போது திருமணம் செய்து கொள்ளாமல் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதோடு தன்னுடைய ஆபாச புகைப்படங்களை வைத்து மிரட்டுவதாகவும் சாந்தினி கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் இது குறித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியுள்ளவதாவது,சாந்தினி எனக்கு யாரென்று தெரியாது, நான் எந்த தவறும் செய்யவில்லை நான் ஏன் பயப்பட வேண்டும். நான் எம்எல்ஏ வாகவும் அமைச்சராகவும் இருந்துள்ளேன். அப்போது என்னை சந்திக்க எத்தனையோ பேர் வருவார்கள்.

அதேபோல என்னை சாந்தினியும் சந்தித்திருக்கலாம். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்து தற்போது பொய்யான புகாரை கொடுத்திருக்கிறார். எனக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளார்கள். சில நாட்களுக்கு முன்னர் வக்கீல் மற்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். நீங்களும் சாந்தினியும் எடுத்துக்கொண்ட புகைப்படம் எங்களிடம் இருப்பதாகவும் அதை வைத்து புகார் கொடுக்கப் போவதாகவும் என்னை போனில் மிரட்டினார்கள்.

-விளம்பரம்-

புகார் கொடுக்காமல் இருக்க 3 கோடி தர வேண்டும் என்று ஆரம்பத்தில் சொன்ன அவர்கள் பின்னர் படிப்படியாக இறங்கி கடைசியில் 50 லட்சம் கேட்டார்கள். ஆனால், நான் தவறு செய்யாத போது நான் ஏன் பயப்பட வேண்டும் என்று எந்த பணமும் தர முடியாது என்று சொல்லிவிட்டேன். பின்னர்தான் தெரிந்தது இந்த கும்பல் பணம் பறிக்கும் கும்பல் என்று, இவர்கள் சாந்தினியை பயன்படுத்திக்கொண்டு என்னிடம் பணம் பறிக்க பார்க்கிறார்கள்.

Advertisement