கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சில நாட்களுக்கு முன்னர் துவங்கியது. சீசன் 1 போலவே இந்த சீசனிலும் மக்களுக்கு பரிட்சிமில்லாத சில முகங்களும் இருக்கின்றனர். அதில் ஒரு நபர் தான் ஹாரிக் ஹாசன்.தற்போது பிக் பாஸ் வீட்டில் ஆண்களில் இவர் தான் கடைக்குட்டி என்றும் கூறலாம்.
இவர் பிரபல சினிமா நடிகர் ரியாஸ் கானின் மகன் என்பது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகே தான் பலருக்கும் தெரியவந்தது. பிக் பாஸ் வீட்டில் நுழைந்ததில் இருந்து இவர் ஒன்றும் தெரியாத அப்பாவி போல தான் இருந்து வருகிறார்.
ஆனால், தற்போது இவரும் தனது சித்து விளையாட்டை ஆரம்பித்து விட்டார் என்பது போல தோன்றுகிறது. நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கம் போல ஒரு டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில் சக போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டிருந்தனர்.
அப்போது ஹாரிக் ஹாசனிடம், நீங்கள் எந்த பெண்ணோடு டேட்டிங் செய்ய விருபுகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், நடிகை ஐஸ்வர்யா என் கூறினார். அதே போலேவே ஐஸ்வர்யாவிடம், இங்கு இருப்பதில் யார் அழகன் என்ற கேட்ட கேள்விக்கு, அவர் ஹாரிக் ஹாசனின் பெயரை கூறியுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் ஏதேனும் தொடங்கி விட்டதா என்று ரசிகர்கள் நினைத்து வருகின்றனர்.