படுக்கைக்கு அழைக்க அது தான் கோட் வேர்ட். ‘காமசூத்ரா’ நடிகை சொன்ன பகீர் தகவல்.

0
3057
- Advertisement -

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

-விளம்பரம்-
Sherlyn Chopra says she was naive when she started out in the film industry.

- Advertisement -

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த லாக் டவுன் டைமில் பிரபல ஹிந்தி பட நடிகை ஷெர்லின் சோப்ரா பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது தொடர்பாக பேசியிருக்கிறார். தமிழில் ‘யுனிவர்சிட்டி’, தெலுங்கில் ‘ஏ ஃபிலிம் பை அரவிந்த்’, ஹிந்தியில் ‘தோஸ்தி : ஃப்ரெண்ட்ஸ் ஃபார் எவர், ஜவானி திவானி : ஏ யூத்ஃபுல் ஜாய் ரைடு, ரக்யூப், ரெட் ஸ்வஸ்திக், தில் போலே ஹடிப்பா’, ஹாலிவுட்டில் ‘பீபெர், காமசூத்ரா 3டி’ போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஷெர்லின் சோப்ரா.

-விளம்பரம்-

இப்போது நடிகை ஷெர்லின் சோப்ரா அளித்த பேட்டி ஒன்றில் “நான் ஹிந்தி திரையுலகில் நுழைந்த போது, எனது போட்டோஷூட் புகைப்படங்களை வைத்துக் கொண்டு வாய்ப்புக்காக பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்றிருக்கிறேன். நான் சந்திக்கும் நபர்கள் இன்று இரவு 11 அல்லது 12 மணிக்கு டின்னரில் சந்திப்போமா? என்று என்னிடம் கேட்பார்கள். அப்போது எனக்கு ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று புரியவில்லை.

பின், நானும் அந்த நேரத்திற்கு என்னால் வர முடியாது என்று கூறி விடுவேன். அடுத்தடுத்து நான் சந்தித்த அனைவரும் என்னிடம் இதையே கூறினார்கள். அதன் பிறகு தான் ஒரு கட்டத்தில் டின்னர் என்றால் அவர்கள் என்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று அர்த்தம் என புரிந்து கொண்டேன். பின், அது தான் ரகசிய கோட் வேர்ட் என்று தெரிந்ததால், ஒருவர் என்னிடம் அப்படி கேட்டபோது, நான் இப்போது டயட்டில் இருக்கிறேன். டின்னர் சாப்பிடுவதில்லை, காலை அல்லது மதிய உணவுக்கு வேண்டுமானால் வருகிறேன் என்று கூறி விட்டேன். அதற்கு பிறகு அதுபோல் என்னை யாரும் கூப்பிடவில்லை” என்று நடிகை ஷெர்லின் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.

Advertisement