பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷில்பா செட்டி. இவர் இந்தியில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் பிரபு தேவா உடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஷில்பா செட்டி பரிச்சயமானார். அதோடு தளபதி விஜய் உடன் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் மோதி விளையாடு படத்திலும் ஷில்பா செட்டி நடித்திருந்தார். இவர் 2009ம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2012ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததாக தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது. இந்நிலையில் நடிகை ஷில்பா செட்டி அவர்கள் தன்னுடைய இரண்டாவது குழந்தையை வாடகை தாய் மூலம் பெற்றது ஏன் எதற்காக என்பது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
இந்த குழந்தையை நடிகை சில்பா செட்டி அவர்கள் வாடகை தாய் மூலம் பெற்றுக் கொண்டார். இந்த தகவலை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரே கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய மகனுக்கு சகோதரர் துணை வேண்டும் என்று நினைத்து தான் இன்னொரு குழந்தை பெற்று எடுக்க முடிவு செய்தோம். அதற்காக நான் குழந்தை பெற்றுக் கொள்ள தயாரானேன். அப்போது இரு முறை நான் கருவுற்றேன்.
ஆனால், எனக்கு இருந்த உடல் குறைபாட்டினால் கரு வளராமல் சிதைத்தது. பின்னர் குழந்தை ஒன்றை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தோம். அதுவும் சில காரணங்களால் நடக்க முடியாமல் போனது. இதை அடுத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்தேன் என்று சில்பா செட்டி தெரிவித்திருந்தார்.