இரண்டாம் பாதி கதய சொல்லும் போதெல்லாம் குனிஞ்சி அழுதுட்டார் – சிவாஜிக்கு கதை சொன்ன அனுபவம் சொன்ன சீமான்

0
2129
Seeman
- Advertisement -

என்னோட கதையை கேட்டு சிவாஜி கணேசன் தேம்பி தேம்பி அழுந்தார் என்று சீமான் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர், நடிகராக திகழ்பவர் சீமான். அதோடு இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பல ஆண்டு காலமாக செயல்பட்டு இருக்கிறார். மக்களின் நலன் கருதி இவர் பல போராட்டங்களை நடத்தி இருக்கிறார். இப்படி இவர் அரசியலில் பிஸியாக இருந்தாலும் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

சீமான் திரைப்பயணம்:

அந்த வகையில் தற்போது சீமான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் முந்திரிக்காடு. இந்த படத்தில் சீமான் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தை மு களஞ்சியம் இயக்கியிருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் என்னோட கதையை கேட்டு சிவாஜி கணேசன் தேம்பி தேம்பி அழுந்தார் என்று சீமான் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

சீமான் எழுதிய கதை:

பொதுவாகவே சிவாஜி கணேசனின் படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் ஆர்வமும் அதிகமாக இருக்கும். இதனாலே சிவாஜியை வைத்து படம் எடுக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்வார்கள். அந்த வகையில் சீமான் கதை எழுதி வெளிவந்த படம் தான் பசும்பொன். இந்த கதையை சீமான் பாரதிராஜாவிடம் சொல்லி இருக்கிறார். அப்போது இந்த கதைக்கு சிவாஜி நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். ஆனால், இதை பாரதிராஜா சிவாஜியிடம் சொல்ல பயந்திருக்கிறார்.

பசும்பொன் படம்:

பின் சீமானே சிவாஜி வீட்டிற்கு சென்று கதையை சொல்லி இருக்கிறார். கிராமத்து சாயலில் இருக்கும் கதை என்பதால் அதைக் கேட்க சிவாஜியும் ஒப்புக்கொண்டார். மேலும், கதையை கேட்டவுடன் சிவாஜி கண் கலங்கி இருக்கிறாராம். பின் சிவாஜி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டவுடன் பாரதிராஜா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அப்படி பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பசும்பொன். இந்த படம் 1995ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

இந்த படத்தில் சிவாஜி கணேசன் உடன் பிரபு, சிவகுமார், ராதிகா, சரண்யா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இது குடும்ப கதையை மையமாகக் கொண்ட படம். இந்த படம் பிரபுவிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மேலும், இந்த படத்தில் அப்பா மகன் இருவருமே இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நடிகர் திலகத்தையே அழ வைத்ததாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் சீமான் பெருமையாக கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement