கனா படத்தில் வந்த ஒரு பகுதி லாபத்தை சிவகார்த்திகேயன் என்ன செய்துள்ளார் பாருங்க.!

0
945
kanaa
- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வரும் சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘கனா’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். கனா படத்தின் லாபத்தில் ஒரு பங்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று வெற்றி விழாவில் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

கனா படத்தின் வெற்றி விழா சென்னை வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது. கனா படம் வெற்றியடைந்ததை அடுத்து அப்படத்தின் சக்சஸ் மீட்டில் அருண்ராஜ் காமராஜ், சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் கனா திரைப்படம் தனியாக வந்தால் நிச்சயமாக லாபகரமாக அமைந்திருக்கும் என்று பல பேர் தொலைபேசியில் தெரிவித்தனர். கனா திரைப்படம் உண்மையிலேயே லாபகரமாண படம் தான் என்று அவர் தெரிவித்தார். 

கனா திரைப்படம் வெளிவந்த அன்று மாரி2 , அடங்க மறு, சீதக்காதி, சிலுக்குவார் பட்டி சிங்கம் போன்ற திரைப்படங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா என்று வெங்கட் பிரபு சென்னை 600028-ல் கூறிய வார்த்தை கனா குழுவுக்கு பொருந்தும் என்றும், படத்தின் லாபத்தில் இருந்து ஒரு பங்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

-விளம்பரம்-
Advertisement