அஜித்தின் இந்த படத்தில் சிவகார்திகேயன் நடித்துள்ளாரா..!இதுவரை வெளிவராத புகைப்படம்..!

0
719

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் அபாரமானது. சாதாரண மேடை கலைஞசராக தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் தொகுப்பாளராக மாறி தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக விளங்கி வருகிறார்.

- Advertisement -

வாரிசு நடிகர்கள் மிகவும் எளிதாக சினிமாவில் நுழையும் காலகட்டமாகிவிட்ட நிலையில் எந்த வித சினிமா பின்பலமும் இல்லாமல் திரைத்துறையில் நடிகராக விளங்கி வரும் பல்வேறு திறமையான நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.

தனுஷின் 3 படத்தில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுகமான சிவ கார்த்திகேயன், நம்ம தல அஜித்தின் படத்திலும் முகம் காண்பித்துள்ளார். ஆம், அஜித் நடித்த ஏகன் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த காட்சி திரைப்படத்தில் இடம்பெறவில்லை.

-விளம்பரம்-

இந்த புகைப்படத்தை அஜித்தின் நெருங்கிய நண்பரும் புகைப்பட கலைருமான சிற்றரசு சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெளியிட்டுள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த புகைப்படத்தை தயாரிப்பு குழுவிற்கு கூட அவர் அளிக்கவில்லையாம்.

Advertisement