லைக்கா தயாரிப்பில் நடிகர் சிவகார்திகேயன்..!இயக்குனர் இவர் தான்..!

0
265
Shivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் ‘சீமராஜா’ படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து படத்தில் கமிட் ஆகியுள்ளார். தற்போது ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அதை தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை ‘ இயக்குனர் ரவிக்குமார், சிறுத்தை சிவ இயக்கத்தில் புதிய படம் என்று கமிட் ஆகியுள்ளார்.

vigneshshivan

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘sk 15’ படத்தை ‘இரும்பு திரை ‘ இயக்குனர் மித்ரன் இயக்கஉள்ளதாக அதிகாரபூர்வ தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.மேலும், ‘sk 15’ படத்திலும் நடிகர் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது விக்னேஷ் சிவனுடன் ஒரு புதிய படத்தில் கைகோர்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளாராம்.

ஏற்கனவே இயக்குனர் விக்னேஷ் சிவன் லைகா நிறுவனத்துடன் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. எனவே, சிவகார்த்திகேயனின் இந்த படத்தை தான் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்றும் கூறப்படுகிறது.