குக்கு வித் கோமாளியில் இருந்து விலகப்போவதாக அறிவித்த ஷிவாங்கி – அவரே சொன்ன காரணம்.

0
2057
Shivangi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது.

-விளம்பரம்-

அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்ப தொடங்கி விட்டனர். இந்நிலையில் கடந்த சீசன் போல இல்லாமல் இந்த சீசன் பல புதிய கோமாளிகள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

திலும் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த சீஸனின் குக்காக என்ட்ரி கொடுத்த ஆச்சரியப்பட வைத்தார். இதற்காக தனியாக சிறப்பு கோர்ஸ் எல்லாம் முடித்து வந்துள்ளார். அதிலும் இந்த சீசனில் முதல் எலிமினேஷன் சுற்று நடந்த எபிசோடில் செஃப் ஆப் தி வீக் எல்லாம் வாங்கினார் ஷிவாங்கி. இந்த சீசனில் இதுவரை கிஷோர், காளையன், ராஜ் ஐயப்பா, vj விஷால், ஷெரின் ஆகியோர் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்.

இந்த சீசன் ஆரம்பம் முதலே ஷிவாங்கி வெளியேறியாமல் இருப்பது தான் அடிக்கடி சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் தொடக்கத்தில் இருந்து மூன்று சீசன்கள் வரை சமையல் பொருட்களின் பெயர் கூட தெரியாதமல் இருந்த ஷிவாங்கி இந்த சீசனில் இத்தனை வாரங்கள் வெளியேறாமல் இருப்பது ஆச்சரியம் என்று பலர் விமர்சித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு விளக்கமளித்துள்ள சிவாங்கி ”’இந்த சீசன் துவங்கியதிலிருந்து நான் எப்படி சமைக்கிறேன் என ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன. நான் தினமும் 6 முதல் 7 மணி நேரம் பயிற்சி செய்தேன். நான் மட்டுமல்ல இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் எல்லோரும் அப்படித்தான்.

-விளம்பரம்-

எங்களின் பெஸ்ட்டை வெளிக்கொண்டுவர நிறைய தியாககங்கள் செய்கிறோம். கோமாளிகளும் அவர்களது கெட்டப்பிற்காக நிறைய பயிற்சி செய்கிறார்கள். உங்களை மகிழ்விக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். இந்த ஷோவை உள்ளபடியே பார்த்து மகிழுங்கள். ஒருவரை குறைவாக மதிப்பிடுவது ஈஸி. நல்ல நாளாக இருந்து என் கடின உழைப்பு கைகொடுத்தால் நான் செய்யும் உணவு சிறப்பாக வரும்.

அப்படி இல்லையென்றால் அது எனக்கான நாள் இல்லை. நான் புதிதாக கற்றுக்கொள்ளவும் மகிழ்ச்சியாக இருக்கவுமே வந்தேன்” என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள ஷிவாங்கி ‘இது தான் என் கடைசி குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி. நான் உங்கள் அனைவரிடமும் வேறு ஒரு சிறப்பான விஷயத்தின் மூலம் சந்திக்க விரும்புகிறேன். எதிர்காலம் எனக்காக என்ன வைத்து இருக்கிறது என்று தெரியவில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement