நடிகை ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற எத்தனையோ நடிகர், நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றனர். குறிப்பாக, விஜய் டிவியில் இருந்து பலர் சினிமாவில் நுழைந்து இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் ஷிவானி நாராயணன்.
அதற்கு முன் இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். பிறகு பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழ் சேனலில் இரட்டை ரோஜா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார். இருந்தாலும், இவர் மிக பெரிய அளவில் பிரபலம் ஆனது இன்ஸ்டாகிராம் மூலம் தான். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத் தான் இருந்தது.
ஷிவானி குறித்த தகவல்:
இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். மேலும், இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோஷூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம். இந்த பிரபலத்தின் மூலம் தான் இவருக்கு தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது. இதனால் இவரது ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்தனர். ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் விளையாடிய விதம் பெரும் ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி இருந்தது. இருந்தாலும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
ஷிவானி நடிக்கும் படங்கள்:
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் ஷிவானி தனது கவர்ச்சியான புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி இருந்தார். பின் இவர் ரீல்ஸ் வீடியோ, போட்டோ என எதையாவது ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றாலே அவர்களுக்கு நிச்சயம் பட வாய்ப்பு வந்துவிடும். அதற்கு ஏற்ப ஷிவானிக்கும் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. இவர் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வந்த விக்ரம் படத்தில் நடித்து இருந்தார்.
ஷிவானி புகைப்படம்:
அதன் பின் விஜய் சேதுபதியின் படம், பொன்ராம் இயக்கும் படம், நடிகர் வடிவேல் கம்பேக் கொடுத்த நாய் சேகர் ரிட்டன்ஸ், ஆர்கே பாலாஜியின் படம் என பல நட்சத்திரங்களுடன் இணைந்து சிவானி நடித்து இருக்கிறார். தற்போது சிவானி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் ஷிவானி வெளியிட்டிருக்கும் புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நெட்டிசன்கள் விமர்சனம்:
அதாவது, இவர் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகி, நீங்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார்களா? முகத்துக்கு என்னாச்சு? மூக்கில் ஏதாவது பிரச்சனையா? அழகா இருந்த மூஞ்சை ஏன் இப்படி பண்ணி வச்சிருக்கீங்க? உதட்டுல என்ன பிரச்சனையா? என்றெல்லாம் கிண்டலடித்து கேலி செய்து வருகிறார்கள்.