ரஜினி செய்திருக்கும் உதவி குறித்து பேட்டியில் சிவராஜ்குமார் கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னட மொழியில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சிவராஜ்குமார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. சிவராஜ்குமார் மறைந்த பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். கடந்த ஆண்டு மறைந்த பிரபல நடிகர் புனீத் ராஜ்குமாரின் சகோதரரும் ஆவார்.

மேலும், சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான பல படங்கள் கன்னடத்தில் மாபெரும் ஹிட் அடித்து இருக்கிறது. அதே போல இவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் ஆக்ஷன் படங்கள் தான். இதனாலேயே இவர் கன்னடத்தில் ஒரு மாஸ் ஹீரோவாகவே திகழ்ந்து வருகிறார். தமிழ் ரசிகர்களுக்கு தற்போது தான் இவரது மாஸ் பற்றி தெரிந்து இருக்கிறது. தற்போது இவர் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி தான் வெளியாகி இருந்தது.
ஜெயிலர் படம்:
இந்த படத்தில் ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ஸ்வேதா போன்ற பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சிவராஜ்குமார் படம்:
இந்த படம் முதல் வாரத்தின் முடிவில் 375 கோடிக்கும் மேல் அதிகமாக கலெக்ஷன் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சிவராஜின் கேமியோ ரோலால் ஜெயிலர் திரைப்படத்தை கன்னட ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். கன்னடத்தில் தற்போது ஜெயிலர் திரைப்படம் இந்த அளவிற்கு வரவேற்பை பெற காரணம் இவர் தான். மாஸான கதாபாத்திரத்தில் ஷிவராஜ்குமாரின் நடிப்பு பலரை கவர்ந்து இருக்கிறது. அதிலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி மற்றும் மோகன் லாலும் மாஸ் காட்டிய நிலையில் இவர் சர்வ சாதாரனமாக ஒரு tissue paper டாப்பாவை கையில் எடுத்து வந்து கலக்கி இருப்பார்.
சிவராஜ்குமார் அளித்த பேட்டி:
இவரது நடிப்பை கன்னட ரசிகர்கள் பாராட்டுவது ஆச்சரியமல்ல தமிழ் ரசிகர்களும் இவரது நடிப்பை பாராட்டி தள்ளி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் ஜெயிலர் படத்திற்கு பிறகு சிவராஜ்குமார் குறித்த செய்திகள் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக உலா வருகிறது. இந்த நிலையில் ஜெயிலர் படம் குறித்து சிவராஜ்குமார் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், ரஜினி சார் அவுட் ஆப் தி ஸ்டேஷன். சென்னைக்கு வந்ததும் முதலாக அவரை சந்திக்க நான் சென்னையிலேயே தங்கி இருக்கிறேன்.

ரஜினி குறித்து சொன்னது:
கன்னட மொழியில் பழம்பெரும் நடிகர் ராஜ்குமார் என்னுடைய அப்பா. அவரை சந்தன கடத்தல் வீரப்பன் கடத்தி இருந்த சம்பவம் அனைவரும் அறிந்ததே. அது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. அந்த நேரத்தில் எங்கள் குடும்பத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் தான் நிறைய உதவிகளை செய்திருந்தார். அதை எல்லாம் எப்போதுமே நான் மறக்க மாட்டேன் என்று பேசியிருக்கிறார். தற்போது சிவராஜ்குமார் அவர்கள் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்திலும் வில்லனாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து தமிழ் படங்களில் இவரை எதிர்பார்க்கலாம் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.






