தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிவித்த பிறகு விஜய் அம்மா சொல்லி இருக்கும் வாழ்த்து செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவர் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். கடந்த சில தினங்களாகவே விஜய் கட்சி கொடி குறித்த செய்தி தான் அதிகமாக இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தான் தமிழக வெற்றிக் கழகம் என்று விஜய், தன் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார்.
இதனால் நிர்வாகிகள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் உற்சாகம் அடைந்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று புதிய செயலியையும் உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார்.
அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை பறக்க விட்டு ஒத்திகை பார்த்து இருந்தார் என்று கூறப்பட்டது.
விஜய் அரசியல்:
பின் இது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இன்று விஜய் அவர்கள் தன்னுடைய கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை ஏற்றியிருக்கிறார். கொடியை ஏற்றுவதற்கு முன்பு உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி கொடியை ஏற்றி இருக்கிறார். அந்த கொடியில் வாகை மலரும், இரு பக்கங்களில் யானை படமும் இடம் பெற்றிருக்கிறது. மேலும், இந்த விழாவிற்கு விஜயின் உடைய தாய் சோபா, தந்தை சந்திரசேகர் வந்திருக்கிறார்கள். அப்போது மேடையில் விஜய், கட்சியை குறித்தும், கொடியை குறித்தும் பேசி முடித்து விட்டு, விழாவிற்கு வந்த தன்னுடைய அப்பா, அம்மாவிற்கு நன்றியை தெரிவித்திருக்கிறார்.
விஜய் கட்சி கொடி:
இந்நிலையில் விஜய் தன்னுடைய கட்சி கொடியை அறிவித்ததற்கு அவருடைய தாய் சோபா வாழ்த்து செய்தி ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ஒரு தாயின் தொப்புள் கொடி உறவு போல் மக்களுக்கு விஜய். அவன் மக்களுக்காக துவங்கியிருக்கும் கட்சி கொடியை அறிமுகப்படுத்தும் விழா என்பது என் மனதில் குதூகலப்படுத்தி பரவசம் அடைந்தேன். விஜய் நாட்டுக்கு ராஜாவானாலும் தாய்க்கு பிள்ளை தானே. விஜய் சினிமாவில் உயர்ந்த அந்தஸ்தில் ஆட்சியை புரிகிறார் என்பது அளவிட முடியாத ஆனந்தம். விஜய் எதையுமே அமைதியாக உள்வாங்கி, ஆர்ப்பரிப்பில்லாமல் ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த தெரிந்த பிள்ளை.
"நாட்டுக்கே ராஜானாலும் எனக்கு பிள்ளை.. வாகை சூடு விஜய்".. "ஏற்கனவே நான் CM இனி PM". விஜய் தாயின் முதல் பிரத்யேக பேட்டி
— Thanthi TV (@ThanthiTV) August 22, 2024
#vijay #tvkvijay #shobhachandrasekar #vijaymother pic.twitter.com/0i8yPO2jaN
சோபா வாழ்த்து பதிவு:
அமைதியின் கடல். சான்றோர் எனக்கேட்ட தாய் என்ற வள்ளுவன் வாக்கை எனக்கு ஏற்கனவே பெற்றுத் தந்துவிட்டார். பெயரிலேயே வெற்றி கொண்ட நீ கட்சியிலும் வெற்றியை பெயராக வைத்திருக்கிறார். திரையில் உன் முகம் பார்த்து உயர்த்திய மக்களுக்கு தரையில் நடந்து வந்து ஏதேனும், எல்லாமுமாய் செய். பசித்தோர் முகம் பார். மக்களின் பிரச்சனையை நேரில் சந்தித்து தீர். அவர்களின் குறைகளை காது கொடுத்து கேள். அவர்களில் ஒருவனாக தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று. பெண்ணியம் காப்பாற்று.
விஜய் குறித்து சொன்னது:
மக்களுக்கு புரட்சிகர திட்டங்கள் தீட்டு. உன் அரசியல் பயணம் பணம் தாண்டி ஊரே பாராட்டும் போது உள்ளம் நெகிழ்கிறது. வானில் பறக்கும் உன் கொடி, உன் அரசியல் வெற்றிக்கு இதுவே முதல் படி. எண்ணியதெல்லாம் நல்லபடி முடி. உன் நண்பா, நண்பிகளின் நம்பிக்கை நீ. உன் கழகத்தின் முதல் தொண்டன் நீ. இப்போது போல் எப்போதும் உண்மையாக இரு. வாகை சூடு விஜய். உன்னை வாழ்த்தி தமிழக வெற்றிக் கழக்கத்தில் வாக்களிக்க காத்திருக்கும் தாய்மார்களில் ஒருவர் நான். ஏற்கனவே நான் ஒரு CM (celebrity mother). இனி நான் ஒரு PM (proud mother) என்று கூறி இருக்கிறார்.