விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய நடிகர் சம்பத் ராமின் கார் – நடிகரின் தற்போதைய நிலை என்ன?

0
477
- Advertisement -

நடிகர் சம்பத் ராமின் கார் விபத்துக்குள்ளாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் சம்பத் ராம். இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்திருக்கிறார். இவர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான எத்தனை மனிதர்கள் என்ற சீரியல் மூலம் தான் மீடியாவில் நுழைந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் ஸ்டண்ட் நடிகராக தான் சினிமா உலகில் நுழைந்தார். அதனை அடுத்து இவர் 1999 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளியாகி இருந்த முதல்வன் படத்தில் சப்- இன்ஸ்பெக்டர் என்ற ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியிலும் பிரபலமாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் வல்லரசு, உன்னைக் கொடு என்னைத் தருவேன், பெண்ணின் மனதை தொட்டு, தீனா, தவசி, ரெட், ரமணா, ஆஞ்சநேயா, ஜனா, வசூல்ராஜா எம்பிபிஎஸ், செல்லமே, திருப்பாச்சி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

சம்பத் ராம் திரைப்பயணம்:

அதோடு இவர் அதிகம் படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாம். பார்ப்பதற்கு இவர் முரட்டுத்தனமான தோற்றத்திலும், அதிக உயரத்திலும் இருப்பதாலே போலீஸ் கதாபாத்திரம் கொடுக்கப்படுகிறது. இதுவரை இவர் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகியிருந்த தங்கலான் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சம்பத் நடித்திருக்கிறார்.

தங்கலான் படம்:

கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் மாளவிகா டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசை இருக்கிறார். மேலும், இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

சம்பத் ராம் குறித்த தகவல்:

அதுமட்டுமில்லாமல் பிரபலங்கள் பலருமே தங்கலான் படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பழமொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அதோடு இவர் வெப்சீரிஸ்களிலும் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் சம்பத் காரின் உடைய கார் விபத்துக்கு உள்ளாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சம்பத் ராம் கார் விபத்து:

அதாவது, சென்னை கிண்டி அருகே சம்பத் ராம் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அவருக்கு பின்னால் வந்த லாரி இவருடைய காரில் மோதி இருந்தது. லாரி வந்த வேகத்தில் காரின் பின் பக்கம் மோதியதால் அப்பளம் போல் நொறுங்கி இருக்கிறது. ஆனால், காரில் உள்ளே இருந்தவர்களுக்கு பெரிதாக அடி ஏற்படவில்லை. சின்ன காயங்களுடன் எல்லாருமே உயிர் தப்பினார்கள். தற்போது அவர்கள் சிகிச்சைக்கு பின் நலமுடன் இருக்கிறார்கள்.

Advertisement