குறும்படத்திலிருந்து 10 காட்சிகளை திருடினாரா வினோத் ? – இயக்குனர் புகார்.

0
373
ajith
- Advertisement -

கோலிவுட் ஸ்டாராக பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் அஜித். இவர் நடித்த துணிவு திரைப்படம் கடந்த 11ஆம் தேதி “தளபதி விஜய் நடித்துள்ளார் வாரிசு திரைப்படத்துடன் வெளியானது. துணிவு படத்தை எச் வினோத் இயக்கியிருந்தார். மேலும் ரெட் ஜென்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. இப்படத்தில் சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தனர். மேலும் முன்னணி கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

துணிவு படத்திற்கு தொடக்கத்திலிருந்து பல எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. ஏனென்றால் பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் மற்றும் அஜித் என இரண்டு பெரும் நடிகர்கள் ஒன்றாக மோதவிக்கின்றனர் என்ற நிலையில் ரசிகர்களுக்கும் இடையே பலவிதமான சர்ச்சையான நிகழ்வுகளும், வாக்குவாதங்களும், இணையத்தில் சண்டைகளும் நடந்த வனமாக இருந்தது. அது முற்றி படம் வெளியான போது ரோகிணி திரையரங்கத்தில் உள்ள பேனர்கள் கிழித்து எறியப்பட்டன.

- Advertisement -

ரசிகர் உயிரிழப்பு :

மேலும் அந்த இடம் ஒரு சண்டைக்களமாகவே காட்சியளித்தது அங்கு வந்து போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்தான் மூலம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இப்படி ஒரு சர்ச்சை முடிவதற்கு முன்னர் அஜித்தின் ரசிகர் ஒருவர் லாரியின் மீது நடனமாடிக்கொண்டிருக்கும் போது தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். மேலும் இந்த விஷயம் குறித்து அஜித்திடம் இருந்து எந்த பதிலும் வராத நிலையில் பலரும் தங்களுடைய கணடங்களை வைத்தனர்.

AK 62 சர்ச்சை :

இப்படி ஒரு சர்ச்சை முடிவதற்குள் வசூல் சர்ச்சை ஆரம்பித்து அதிலும் துணிவா, வாரிசா என பிரச்னைகள் எழுந்தன. ஆனாலும் துணிவு படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அஜித் “ஏகே 62” படத்திற்காக தயாராகி வருகிறார். இப்படத்தை ஏற்கனவே விக்னேஷ் சிவம் இயக்குவார் என்று இந்த நிலையில் அவர் தற்போது படத்திலிருந்து இருந்து விலகி உள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு மகிழ் திறுமேனி இயக்குவதாகவும் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாகவும் சில நாட்களுக்கு முன்னால் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவை அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடதக்கது.

-விளம்பரம்-

வலிமை படத்தில் திருடப்பட்ட காட்சிகள் :

இந்த நிலையில் நடிகர் அஜித் நடித்த “வலிமை” திரைப்படத்தின் பல காட்சிகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது ராஜேஷ் ராஜா என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு “தங்க சங்கிலி” என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். அஜித் நடித்த வலிமை படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த குறும்படத்தில் இருந்து 10 காட்சிகள் “வலிமை” படத்தில் இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

போலீஸில் வழக்கு பதிவு :

இந்த விஷயம் குறித்து “தங்க சங்கிலி” குறும்படத்தை இயக்கிய ராஜேஷ் ராஜ பல முறை இயக்குனர் எச்.வினோத் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தினால் தற்போது போலீசில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலிமை திரைபடம் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் படத்தின் 10 காட்சிகள் திருடப்பட்டது என்ற தகவல் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

Advertisement