4 கோடி சொகுசு கார், பூஜையில் கண் கலங்கிய ஷ்ரத்தா கபூர் – கழுவி ஊற்றும் ரசிகர்கள். காரணம் இதான்

0
206
- Advertisement -

சொகுசு கார் வாங்கிய நடிகை ஷ்ரத்தா கபூரை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஷ்ரத்தா கபூர். இவர் இந்தியில் பிரபல நடிகர் சக்தி கப்ரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஷ்ரத்தா கபூர் 2010 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த தீன் பத்தி என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் லவ் கா தி எண்ட் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கிறது. இதுவரை இவர் 25 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் Stree 2 என்ற படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஜ்குமார் ராவ் நடித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும், ஷ்ரத்தா கபூர் நடிகை மட்டும் இல்லாமல் பாடகரும் ஆவார். அதோடு இவர் மிகப்பெரிய கார் பிரியரும் ஆவார். இவர் பல சொகுசு கார்களை வாங்கி இருக்கிறார். இவரிடம் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) போன்ற பல கார்கள் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ஷ்ரத்தா கபூர் வாங்கி இருக்கும் சொகுசு கார் குறித்த சர்ச்சை தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

ஷ்ரத்தா கபூர் அவர்கள் லம்போர்கினி ஹூரகன் டெக்னிகா(Lamborghini Huracn Tecnica) என்ற பிரபலமான சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இதனுடைய மதிப்பு 4.8 கோடியாகும். இது தொடர்பான புகைப்படத்தை தான் தற்போது ஷ்ரத்தா கபூர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷ்ரத்தா கபூருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், பாலிவுட் நடிகைகளில் லம்போர்கினி கார் வாங்கிய நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கிறார். ஆனால், ஷ்ரத்தா கபூர் சொகுசு கரை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். காரணம், 2019 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான மும்பை ஆரே காலனியில் மெட்ரோ அமைப்பதற்கு எதிராக ஷ்ரத்தா கபூர் போராடி இருந்தார். அங்கு இருக்கும் மரங்களை வெட்டக்கூடாது, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றெல்லாம் ஷ்ரத்தா கபூர் கோஷமிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இவர் சொகுசு காரை வாங்கி இருப்பது குறித்து தான் நெட்டிசன்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று போராடும் ஷ்ரத்தா கபூர் ஒற்றை இலக்கில் மைலேஜ் தரும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் டீசல் ‘லம்போர்கினி ஹூரகன் டெக்னிகா’ காரை வாங்கியது சரியா? என்றெல்லாம் விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement