சமீப காலமாக இந்திய சினிமாவில் பல நிகழ்வுகள் நிகழ்ந்து வருகிறது. அதில் பல பிரபலங்கள் அடுத்தடுத்து மரணித்து வருகிறார்கள். கொரோனா காரணமாக பல பேர் இறந்து உள்ளார்கள். இந்நிலையில் தற்போது பிரபமான நடிகர் ஒருவர் இறந்து உள்ளார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புகழ்பெற்ற தொலைக்காட்சியில் நடிகராக நடித்த ஜகேஷ் முக்கட்டி தற்போது மரணமடைந்துள்ளார். இவர் அதிக உடல் எடை காரணமாக அவதிப்பட்டு வந்து உள்ளார்.
இதனால் அவருக்கு ஆஸ்துமா மற்றும் மூச்சு விடுதலில் பிரச்சனை ஏற்பட்டு இருந்து உள்ளது. இந்நிலையில் இவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தார்கள். பின் சிகிக்சை பலனின்றி நடிகர் ஜகேஷ் முக்கட்டி மரணம் அடைந்துள்ளார். நடிகர் ஜகேஷ் முக்கட்டி அவர்கள் புகழ்பெற்ற ‘ஸ்ரீ கணேஷ்’ நாடகத்தில் விநாயகராக நடித்தவர்.
இந்த தொடர் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த தொடரின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆனார். தற்போது இவருக்கு 81 வயதில் தாயார் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். இது குறித்து ஜகேஷ் முக்கட்டி உடன் நடித்த நடிகை அம்பிகா ரஞ்சன்கர் கூறியது, ஜகேஷ் முக்கட்டி அவர்கள் இரக்கம் மற்றும் நகைச்சுவை குணம் மிகுந்தவர்.
சீக்கிரமாக நம்மிடமிருந்து விடை பெற்று விட்டார். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று வேதனையுடன் கூறியுள்ளார். தற்போது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஜகேஷ் முக்கட்டிக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் நடிகை மேக்னா ராஜ்ஜின் கணவரும், நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா அவர்கள் திடீரென்று இறந்தார். சிரஞ்சீவி சர்ஜா தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர் அர்ஜுனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.