அவங்க ரெண்டு பேரும் அப்படி சொல்லி – விக்ரம் விஜய் பட நடிகை பேட்டி.

0
1199
Vijay

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். மாடல் அழகியான இவர் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் இவர் தமிழில் வெளியான உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்தார். பிறகு நடிகை ஸ்ரேயா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விக்ரம், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து பட்டையை கிளப்பினார். பிறகு ஸ்ரேயாவுக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இருப்பினும் இவர் தெலுங்கு படங்களில் அவ்வப்போது தலை காண்பித்து வந்தார்.

நடிகை ஸ்ரேயா கடைசியாக சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் தான் நடித்திருந்தார். பின் 2018 ஆம் ஆண்டு நடிகை ஸ்ரேயா அவர்கள் உருசியாவை சேர்ந்த தொழிலதிபரும், டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை ஸ்ரேயா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் விக்ரம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

அதில் அவர் கூறியிருப்பது, நான் விஜய் சார் மற்றும் விக்ரம் சாருடன் படங்களில் நடித்திருக்கிறேன். விஜய் மற்றும் விக்ரம் இவர்கள் இருவரும் சோர்வாக இருந்து நான் பார்த்ததே கிடையாது. அந்த அளவிற்கு எனர்ஜியாக இருப்பார்கள். அவர்கள் இருவருமே மிக கடின உழைப்பாளிகள் என்று கூறி உள்ளார். நடிகை ஸ்ரேயா அவர்கள் தளபதி விஜயுடன் அழகிய தமிழ் மகன் என்ற படத்திலும், விக்ரமுடன் கந்தசாமி என்ற படத்தில் நடித்து உள்ளார்.

இந்த இரண்டு படமுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. தற்போது நடிகை ஸ்ரேயா அவர்கள் “சண்டக்காரி” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் விமல், ஸ்ரேயா, சத்யன் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement