மாஸ்க் கூட இல்லாமல் ஊரடங்கில் நடுரோட்டில் கணவருடன் நடனமாடிய ரஜினி, விஜய் பட நடிகை.

0
3770
shriya

தற்போது கொரோனா வைரஸ் தான் உலக நாடுகளை அச்சுறுத்து வரும் ஒரு நோயாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த நோய் தோற்றால் பல லட்சம் பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். மேலும், இந்தியா, அமெரிக்கா, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகளும் இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்படாமல் திணறி வருகின்றனர். பல்வேறு நாடுகளை பதித்துள்ள இந்த வைரஸ் தோற்று ஸ்பெயின் நாட்டையும் பாதித்துள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டில் நாட்டில் வசித்து வரும் பிரபல நடிகை ஸ்ரேயா நடு ரோட்டில் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். தமிழில் வெளியான உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார் ஸ்ரேயா. நடிகை ஸ்ரேயா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,நடிகர் விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தொடர்ந்து படங்களில் நடித்து ஸ்ரேயா இடையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார்.

- Advertisement -

அதன் பின்னர் வடிவேலு கதாநாயகனாக நடித்த இந்திர லோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தில் ஒரே ஒரு குத்து பாடலுக்கு நடனமாடி இருந்தார். அந்த பாடலுக்கு பின்னர் தான் ஸ்ரேயாவிற்கு முற்றிலும் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இருப்பினும் தெலுங்கு படங்களில் அவ்வப்போது தலை காண்பித்து வந்தார் . ஆனால் சில வருடங்களாக இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என தெரியாமல் இருந்தது. திடீரென்று ரஸ்யாவை சேர்ந்த தனது காதலர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் தனது காதல் கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.இந்நிலையில் ஸ்ரேயாவும் அவரது கணவரும் பார்சிலோனா நகரில் நடுரோட்டில் மாஸ்க் எதுவும் அணியாமல் நடனம் ஆடியுள்ளனர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பார்சிலோனாவில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஸ்ரேயா நடுரோட்டில் கணவருடன் நடனமாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

-விளம்பரம்-
Advertisement