நடிகை ஸ்ரேயாவின் கணவருக்கு அறுவை சிகிச்சை – பாவம் இப்படி ஒரு பிரச்சனையாம். அவரே வெளியிட்ட புகைப்படம்.

0
601
shriya
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்து இருக்கிறது. மாடல் அழகியான இவர் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் நடித்து வந்தார் அதன் பின்னர் படங்களில் வெளியான உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார் ஸ்ரேயா. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதோடு நடிகை ஸ்ரேயா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விக்ரம், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.

-விளம்பரம்-

தொடர்ந்து படங்களில் நடித்து ஸ்ரேயா இடையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். இருந்தும் இடையிடையே ஒரு சில படங்களில் நடித்தார் ஸ்ரேயா. கடந்த 2018 ஆம் ஆண்டு திடீரென்று ரஸ்யாவை சேர்ந்த தனது காதலர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை ஸ்ரேயா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ஸ்ரேயா வெளிநாட்டில் செட்டில் ஆனார். திருமணத்திற்கு பிறகு இவர் தன் கணவருடன் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்.

- Advertisement -

ஸ்ரேயா நடிப்பில் வெளியாகும் படம்:

அதோடு திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார். ஒரு சில படங்களில் மீண்டும் நடிக்க துவங்கினார் ஸ்ரேயா. அதிலும் தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் RRR படத்தில் ஒரு முக்கிய கதாபாரத்திரத்தில் நடித்து இருக்கிறார் ஷ்ரேயா. இந்த படம் சமீபத்தில் வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போய்யுள்ளது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

ஸ்ரேயா நடித்த படங்கள்:

இதை தவிர நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் சண்டைக்காரி, நரகாசுரன் போன்ற படங்களில் ஸ்ரேயா நடித்துள்ளார். அதே போல இவர் எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு குழந்தை பிறந்துவிட்டதாக திடீரென்று ஸ்ரேயா அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருந்தார். ஆனால், ஸ்ரேயா கர்பமானதை அறிவிக்காமல் படு சீக்ரெட்டாக வைத்து குழந்தை பிறந்து பல மாதங்கள் கழித்தே அறிவித்தார்.

-விளம்பரம்-

ஸ்ரேயா கணவர் செய்து கொண்ட அறுவை சிகிச்சை:

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா தான் அடிக்கடி எடுத்த போட்டோஷுட் புகைப்படம், வீடியோக்கள், தன் குழந்தையின் புகைப்படம் வீடியோ என்று அனைத்தையுமே சோசியல் மீடியாவில் பகிர்ந்து ரசிகர்களுடன் உரையாடல் நடத்தி வருவார். இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் சமீபத்தில் பதிவு ஒன்று பதிவிட்டு இருந்தார். அது என்னவென்றால், தன்னுடைய கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பதிவிட்டு இருந்தார். இது குறித்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகி கேள்வி கேட்டு இருந்தார்கள்.

ஸ்ரேயா பதிவிட்ட பதிவு:

பின் ஸ்ரேயா கூறியது, என் கணவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அறுவை சிகிச்சையை சிறப்பாக செய்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் உதவி செய்த நடிகர் ராம்சரண் மனைவி உபசன்னாவுக்கும் தனது நன்றி என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் இருக்கும் போது தன் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஸ்ரேயா சரன் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். தற்போது இது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது.

Advertisement