திருமணம் நடக்காமல் இருக்க பெற்றோர்கள் தான் காரணமா ? மனம் திறந்த சுருதி ஹாசன் (என்ன சொல்லியுள்ளார் பாருங்க)

0
1049
shruthihaasan
- Advertisement -

தன் காதலனை திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணத்தை முதன் முதலாக ஸ்ருதிஹாசன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து இருந்தவர் ஸ்ருதி ஹாசன். இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், அதற்கு முன்பு இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மேலும், 7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் ஸ்ருதி ஹாசன் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இறுதியாக இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த லாபம் என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காண முடியவில்லை. அதோடு ஸ்ருதிஹாசன் நடிப்பை தவிர இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

- Advertisement -

ஸ்ருதிஹாசன் முதல் காதல்:

இதனிடையே நடிகை சுருதி ஹாசன் அவர்கள் லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலை காதலித்து இருந்தார். இது ஸ்ருதி ஹாசன் அப்பா கமல்ஹாசனுக்கும் தெரியும். அதுமட்டும் இல்லாமல் இருவரும் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், ஸ்ருதி ஹாசன் அதனை மறுத்தார். பின் இருவரும் காதலை முறித்துக்கொண்டதாக ஸ்ருதி ஹாசன் அறிவித்து இருந்தார். மேலும், ஸ்ருதி காதலை முறித்துக்கொண்டு பிரிந்த மைக்கேல் வேறு ஒரு பெண்ணுடன் காதலில் விழுந்தார்.

ஸ்ருதிஹாசன்-சாந்தனு காதல்:

ஆனால், காதலை பிரிந்த சுருதி சிறிது காலம் மன அழுத்தத்தில் இருந்தார். இதனை அடுத்து ஸ்ருதி ஹாசன், சாந்தனு ஹசாரிக்காவை காதலிப்பதாக தெரிவித்து இருந்தார். அதோடு அவருடன் தான் ஸ்ருதி ஹாசன் ஒன்றாக வசித்து வருகிறார். சாந்தனு மும்பையை சேர்ந்தவர். இவர் பிரபல டூடுல் கலைஞர் ஆவார். இவர்கள் இருவருமே தாங்கள் காதலிப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது குறித்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பல கேள்விகள் எழுப்பி இருந்தார்கள்.

-விளம்பரம்-

திருமணம் குறித்து ஸ்ருதிஹாசன் அளித்த பதில்:

மேலும், இவர்கள் இருவரும் சேர்ந்து நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படத்தை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் பலரும் இவர்களின் திருமணம் குறித்து பல கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் தன்னுடைய காதலனை திருமணம் செய்யாதது ஏன்? என்பது குறித்த கேள்விக்கு தற்போது ஸ்ருதிஹாசன் கூறியிருப்பது, எனக்கு திருமணத்தின் மீது பயமாக இருக்கிறது. அதனால் தான் திருமணம் பற்றி யோசிக்கவில்லை. எனது அப்பா அம்மாவின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்துவிட்டது.

திருமணம் செய்யாத காரணம்:

இதன் காரணமாகத் தான் நான் யோசிக்கிறேன் என்று அர்த்தமில்லை. திருமணம் என்கிற வார்த்தையில் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை. பயம் மட்டுமே இருக்கிறது. அதனால் திருமணம் பந்தம் குறித்து நான் நிறையவே யோசித்து வருகிறேன். இருப்பினும் சாந்தனு என்னுடைய வாழ்க்கைக்கு வந்தவுடன் நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எங்கள் இரண்டு பேருக்கும் இடையே நிறைய விசயங்கள் ஒத்துப்போகிறது. நான் இப்போது ஆசீர்வதிக்கப்பட்டவராக கருதுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement