அந்த படத்துல நடிச்சிருக்க கூடாது, ஏன் என்றால் – பிரேமம் ரீ – மேக்கில் நடித்தது குறித்து வேதனையில் சுருதிஹாசன்

0
439
- Advertisement -

ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்த படம் பிரேமம். இந்த படம் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் தான் வெளிவந்தது. ஆனால், தென்னிந்திய ரசிகர்களால் பிரேமம் படம் கொண்டாடப்பட்டது. இன்னும் கூட மறக்க முடியாத படம். இந்த படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், பிரேமம் படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு மொழி மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இன்னும் அந்த படத்தின் நினைவுகள் ரசிகர்கள் மனதிலேயே நிற்கிறது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

இந்த படம் தமிழில் சேரன் இயக்கத்தில் வந்த ஆட்டோகிராப் போன்று கலந்த கலவையாக தான் இருந்தது. இந்த படத்தில் மூன்று நாயகிகள் இருந்தார்கள். இந்த படத்தில் நடித்த நடிகர்கள் பலர் தற்போது தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்கள் திகழ்கிறார்கள். நிவின்பாலி தொடங்கி சாய்பல்லவி, அனுபமா என பலரும் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதிலும் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் சாய்பல்லவி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

- Advertisement -

ப்ரேமம் படம்:

இந்த படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் ஒரு முத்திரை பதிக்க முடிந்தது. சமீபத்தில் கூட இவருடைய நடிப்பில் வெளிவந்த ஷியாம் சிங்கா ராய் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதேபோல் அனுபமாவும் இந்த படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக அனுபமா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இப்படி எல்லாருடைய வாழ்க்கையை மாற்றிய படமாக பிரேமம் திகழ்கிறது.

தெலுங்கு ப்ரேமம் படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன்:

இந்த படம் மலையாள மொழியில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பிற மொழிகளிலும் இந்த படத்தை ரீமேக் செய்திருந்தார்கள். அந்த வகையில் தெலுங்கில் இந்த படத்தை ரீமேக் செய்தார்கள். இதில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து இருந்தார். மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடித்தார். மேலும், இவர் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்று சொல்லும் போதே சோஷியல் மீடியாவில் பலரும் ட்ரோல் செய்து விமர்சித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

ஸ்ருதிஹாசனை விமர்சித்த ரசிகர்கள்:

அதுமட்டுமில்லாமல் அந்த கதாபாத்திரத்திற்கு ஸ்ருதிஹாசன் சரியானவர் இல்லை என்பது பலரின் கருத்தாக இருந்தது. இருந்தாலும் அதையெல்லாம் ஓரம் தள்ளிவிட்டு தான் சுருதிஹாசன் அந்தப் படத்தில் நடித்தார். அந்த படமும் வெளியாகியிருந்தது. படம் வெளியாகியும் பலரும் விமர்சித்து இருந்தார்கள். இந்த நிலையில் படம் வெளியாகி சில வருடங்கள் கழித்து ஸ்ருதிஹாசன் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பிரேமம் படம் குறித்து சில விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார்.

பிரேமம் படம் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்னது:

அதில் அவர் கூறி இருப்பது, பிரேமம் படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நான் நடித்து இருக்கக்கூடாது. அந்த சமயத்தில் அந்த கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பிடித்துப் போய் தான் அதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால், பலரும் அதை விமர்சித்து இருந்தார்கள். நான் முதன் முறையாக இவ்வளவு கிண்டலுக்கு ஆளானது இந்த கதாபாத்திரத்திற்காக தான். இருந்தாலும் எனது வேலையை நான் சரியாகவே செய்தேன் என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி பேசியிருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement