சன்னி லியோனின் சவாலை ஏற்ற ஸ்ருதிஹாசன் – என்ன சாவல்ன்னு நீங்களே பாருங்க? வைரலாகும் வீடியோ

0
632
sunny
- Advertisement -

சன்னி லியோனின் சவாலை ஏற்று ஸ்ருதிஹாசன் வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாலிவுட்டில் பாலியல் ஆபாச படங்களில் நடித்து பின்னர் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக மாறியவர் நடிகை சன்னி லியோன். தற்போது இவர் ஹிந்தி திரையுலகின் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஆபாச நடிகையாக இருந்தாலும் இவரை இந்திய ரசிகர்கள் முன்னணி நடிகையாக ஏற்றுக்கொண்டனர்.

-விளம்பரம்-
sunny

மேலும், சன்னி லியோன் திருமணம் ஆன பின்னர் இரண்டு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தற்போது இவர் தமிழ், மலையாளம் என்று பல படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் பார்ன் எனப்படும் நீலப்படங்களில் நடித்து வந்தார். அதன் பின் இவர் பாலிவுட்டில் அறிமுகமாகி நடிகையாக மாறிவிட்டார். தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதன் பின்னர் வீரமாதேவி என்ற படத்திலும் சன்னி லியோன் நடித்து இருந்தார். இவருக்கென்று உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

- Advertisement -

சன்னி லியோன் சவால்:

தற்போது இவர் நடித்துள்ள ஓ ஊமை கோஸ்ட் என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. அது மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சன்னி லியோன் அவர்கள் Y என்ற ஆங்கில எழுத்து போல் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்து இதே போன்று உங்களால் செய்ய முடியுமா? என்று சவால் விடுத்தார்.

ஸ்ருதிஹாசன் வெளியிட்ட வீடியோ:

இந்த சவாலை ஏற்று பல ரசிகர்கள் தலைகீழாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசனும், சன்னி லியோன் போலவே ஆங்கில எழுத்து Y வடிவில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அவர் சன்னிலியோனின் சவாலை ஏற்றுக்கொண்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

சுருதிஹாசன் திரைப்பயணம்:

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சுருதிஹாசன். இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழில் சூர்யா நடிப்பில் வெளிவந்து இருந்த சிங்கம் 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்து இருந்தார்.

சுருதிஹாசன் நடிக்கும் படம்:

அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காண முடியவில்லை. அதோடு ஸ்ருதிஹாசன் நடிப்பை தவிர இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது பிரபாஸ் நடித்து வரும் ’சலார்’ என்ற படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் 3 தெலுங்கு படங்களிலும் சுருதிஹாசன் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement