நாளுக்கு நாள் கொரோனாவின் ஆட்டம் தலை விரித்து ஆடுகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் இழந்து உள்ளார்கள். தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13387 ஆகவும், 437 பேர் பலியாகியும் உள்ளார்கள். இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மீண்டும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார்.
இதனால் போக்குவரத்துகள், கடைகள், பொது இடங்கள், சினிமா படப்பிடிப்புகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவினால் மக்களின் இயல்பு வாழ்கை மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் பிரபலங்கள் எல்லோரும் வீட்டிலேயே இருக்கிறார்கள்.
வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்கான பல்வேறு வேலைகளை செய்து அதை வீடியோக்களாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இத்தனை வருடங்களாக செய்ய நேரம் இல்லாமல் போன பல விஷயங்களை தற்போது அவர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் 15 வருடங்கள் கழித்து முதன் முறையாக காபி குடித்ததாக சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார்.
காபி குடித்த போது அவருடைய முகத்தில் ஏற்பட்ட மோசமான ரியாக்ஷனை புகைப்படமாக எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பின் அதில் அவர் கூறி இருப்பது, 15 வருடங்கள் கழித்து மிகச்சிறிய அளவிலான காப்பியை குடிக்க ஆரம்பித்து இருக்கிறேன். இது மிகவும் விசித்திரமான உணர்வாக இருக்கிறது என்று கூறி உள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் அவர்கள் தென்பாண்டி சீமையிலே என்ற பாடலை தன்னுடைய குரலில் வித்தியாசமாக பாடி அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவரப்பட்டது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் பாடகர், இசையமைப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர்.
நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பூஜை, 3 , புலி, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் தமிழில் இலாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் ரவி தேஜா நடிக்கும் கிராக் என்ற படத்தில் சுருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். அந்த படம் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது. மே மாதம் துவக்கத்தில் இந்த படம் வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா பிரச்சனை முழுமையாக முடிந்த பிறகு தான் கிராக் படம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.