கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை ஸ்ருதிஹாசன் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது. கடைசியாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘லியோ’ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருந்தார்கள். அதிரடி ஆக்சன் பாணியில் வெளிவந்த லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். இதை அடுத்து தற்போது லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கூலி படம்:
இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அதேபோல் இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா ராம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் சாகிர், ஆமீர் கான் உட்பட பலர் நடிக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா :
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது. இதில் அமீர்கான், நாகர்ஜுனா, சௌபின் சாகிர் உட்பட கூலி படத்தின் பிரபலங்கள் பலர் நடித்து இருக்கிறார்கள். நடிகர்கள் பலருமே விழாவிற்கு வந்திருக்கிறார்கள். அப்போது விழாவிற்கு வந்த நடிகை ஸ்ருதிஹாசன், இந்த நாள் என் வாழ்க்கையில் ரொம்பவே முக்கியமானது. ரஜினி சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
https://www.youtube.com/watch?v=g6VVk3tGiOo
ஸ்ருதிஹாசன் பேசியது:
இந்த படத்தில் நடித்திருக்கும் சௌபின் சார் ரொம்ப திறமை வாய்ந்தவர். முக்கியமாக உபேந்தர் சாருடைய ஸ்கிரின் பிரசன்ஸ் அதிரடியானதாக இருக்கும். இந்த படத்தில் சத்யராஜின் மகளாக நான் நடித்ததில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு கூலி படத்தில் ப்ரீத்தி கதாபாத்திரத்தை கொடுத்ததற்கு நன்றி. அதேபோல் என்னுடைய அப்பாவுக்கு விக்ரம் படத்தை கொடுத்திருக்கும் நன்றி லோகேஷ். அந்த படத்தில் இருந்து தான் உங்களுடைய பெரிய ரசிகை ஆகிவிட்டேன்.

படம் பற்றி சொன்னது:
லோகேஷ் கனகராஜ் அமைதியாக செயல்படக்கூடிய ஒரு இயக்குனர். அது மட்டும் இல்லாமல் நம்மோடு ஒன்றிணைந்து செயல்படக்கூடியவர். அமீர் கான் உங்களுடன் இணைந்து பணியாற்றியதை பெருமையாக பார்க்கிறேன். அனிரூத் நினைத்து பெருமையாக இருக்கிறது. அவருடைய இளமை காலத்தில் இருந்து நான் அவரை பார்த்து வருகிறேன். உங்களுடைய ஸ்பெஷலான பின்னணி இசை படத்தில் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்கிறது என்று கூறியிருக்கிறார்.






