பிராமண சமூகத்தினர் என்மேலக் கோவமா இருக்காங்க, என்ன ஆன்டி இந்துனு சொல்றாங்க – ‘ஷ்யாம் சிங்கா ராய்’ இயக்குநர் பேட்டி.

0
562
shyam
- Advertisement -

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நானி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நானி நடிப்பில் இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘ஷ்யாம் சிங்கா ராய்’. இது மறுபிறவியை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம். இப்படத்தில் சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். இந்த தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய பல மொழிகளில் வெளிவந்து மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படம் குறித்து இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது,

-விளம்பரம்-

இந்தப் படம் தெலுங்கில் ஹிட்டாகும் என்று எனக்கு தெரியும். ஆனால், தமிழகத்தில் இந்த அளவுக்கு இந்த படத்தை கொண்டாடுவார்கள் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. தமிழ் மக்கள் பாராட்டுவது நினைத்து எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது. தியேட்டரில் வெளியானதை விட ஓடிடியில் வெளியான பிறகு படத்தை இன்னும் அதிக பேர் பார்த்து பாராட்டுகிறார்கள். சமூக வலைத்தளங்களின் மூலம் பார்வையாளர்கள் தினமும் இந்த படம் குறித்து கருத்து போடுவது நினைத்து ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த படத்தை முதலில் மறுஜென்ம காதல் கதையாக எடுக்க நினைத்தோம்.

- Advertisement -

இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் அளித்துள்ள பேட்டி:

ஆனால், சமூகம் சார்ந்த படமாக உருவாக்க நினைக்கவில்லை. அதிலும் கொல்கத்தா கதைக்களத்தை யோசிக்கவும் இல்லை. இந்த ஐடியா கதாசிரியர் சத்யதேவ் சொன்னதுதான். அது எனக்கு சரி என்று தோன்றியது. இதனால் படத்தின் இரண்டாம் பாதியை கொல்கத்தா பின்னணியில் உருவாக்கினோம். எனக்கும் தனிப்பட்ட முறையில் வங்கத்தின் கலை, இலக்கியம், கலாச்சாரம் எல்லாம் ரொம்ப பிடிக்கும். அதனால் அந்த நிலப்பரப்பில் ஒரு எழுத்தாளர் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து தான் கதையை உருவாக்கினேன். அதுமட்டுமில்லாமல் வங்கம் பின்னணி என்பதால் கம்யூனிஸம் தானாகவே கதைக்குள் வந்துவிட்டது.

காதல் கதை சமூகம் சார்ந்த பிரச்சினைகள் :

1970 ஆம் ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் தான் கம்யூனிச செல்பாடுகள் அதிகமாக நடந்து கொண்டிருந்தது. ஒரு பக்கம் சாரு மஜீம்தார் நக்சல்பாரி இயக்கத்தை கட்டமைத்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் நெருக்கடி நிலை, காங்கிரஸ் கட்சியுடன் மோதல் என கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகள் அதிகம் இருந்தது. இப்படி பல்வேறு காரணங்களாலும் கம்யூனிஸத்தை நாங்கள் ஓரளவு காண்பிக்க நினைத்தோம். இந்த படம் சமூக கருத்துள்ள படமாக பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு காதல் கதை சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பேசி உள்ளது. அதேபோல் 50 ஆண்டுகளுக்கு முன்னால் நடக்கும் காதல் கதை. அந்த கால கட்டத்தில் இருவருக்கும் காதல் நிகழும் போது சமூகத்தில் என்ன மாதிரியான பிரச்சனைகளை கடந்து வருகிறார்கள் என்பது எல்லாம் யோசித்து தான் தேவதாசி கதாபாத்திரத்தை கொண்டுவந்தோம்.

-விளம்பரம்-

தேவதாசி முறை விளக்கம்:

மேலும், தேவதாசி முறையை தமிழ்நாடு ஓழித்திருந்தாலும், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்காளம், குஜராத் என பல மாநிலங்களில் இந்த பிரச்சனை இருக்கிறது. படத்திற்காக தேவதாசி முறை குறித்து நிறைய படித்தேன். தேவதாசி முறை ஒழிப்புக்காக போராடிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி உள்ளிட்ட பல தமிழக போராளிகள் பல விஷயங்களை தெரிந்து கொண்டு கதாநாயகன் ஒரு கம்யூனிஸ்ட் பின்புலத்தைக் கொண்ட எழுத்தாளர் கான்சப்டை உருவாக்கினேன். பின் அனைத்து சமூக சீர்திருத்தவாதிகள் உடன் எழுத்தாளர் ஷ்யாம் சிங்கா ராய் கடித தொடர்பு வைத்திருப்பதாக படத்தில் காண்பித்திருக்கிறோம்.

படம் வெளிவந்து இயக்குனருக்கு ஏற்பட்ட பிரச்சனைகள்:

அதுமட்டுமில்லாமல் படம் தியேட்டரில் வெளியானதில் இருந்தே நிறைய எதிர்ப்புகள், மிரட்டல்களும் வந்துகொண்டுதான் இருந்தது. பலர் வெறுப்பைக் காட்டுவார்கள். குறிப்பாக பிராமண சமூகத்தினர் என் மேல கொலை வெறியில் இருக்கிறார்கள். அதோடு நான் ஒரு கம்யூனிஸ்ட், எனக்கு கிறிஸ்துவ மிஷனரிகளிடம் இருந்து பணம் வருகிறது என்றெல்லாம் விமர்சித்திருக்கிறார்கள். என்னை திட்டுவது மட்டுமில்லாமல் என் அப்பாவையும் சேர்த்து திட்டுகிறார்கள். ஆனால், இதற்கெல்லாம் நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இன்னும் மக்கள் குறித்து ஆழமாக சிந்தித்து படம் பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement