‘உங்கள் கூகுள்பே நம்பரை அனுப்புங்கள்’ – எலான் மாஸ்க் டீவீட்டை கலாய்த்த நடிகர் சிபி ராஜ்.

0
332
cibi
- Advertisement -

டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கை நடிகர் சிபிராஜ் கிண்டல் செய்து பதிவிட்டு இருக்கும் ட்வீட் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவின் பயன்பாடு அதிகமாகி சென்று கொண்டிருக்கிறது. அதிலும் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என பலருமே ட்விட்டரில் கணக்கு வைத்திருக்கிறார்கள். இந்த ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்.

-விளம்பரம்-

இவர் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக திகழ்கிறார். மேலும், இவர் சமீபத்தில் தான் இந்த ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கி இருந்தார். அதன் பின் இவர் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருந்தார். இது அனைவரும் அறிந்த ஒன்று. அதிலும் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ உட்பட பல முக்கிய நிர்வாகிகளை இவர் நீக்கியும் இருக்கிறார். இது பலருக்கும் அதிர்ச்சி அளித்திருந்தது. இந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு அதிரடி முடிவை எலான் மஸ்க் எடுத்திருக்கிறார்.

- Advertisement -

எலான் மஸ்க் டீவ்ட்:

அது என்னவென்றால், ட்விட்டரில் புளூடிக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதம் 8 டாலர் செலுத்த வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். பொதுவாக, ட்விட்டர் நிறுவனம் நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சமூகத்தில் முக்கியமான இடத்தில் உள்ள நபர்களுக்கு ப்ளூ டிக்கை வழங்கி வருகிறது. இதன் மூலம் போலி டீவ்ட் கணக்குகளை தவிர்க்கவும், சம்பந்தப்பட்ட நபர்களை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

புளூடிக் கணக்கு :

மேலும், இது ஒரு அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. பல முக்கிய நபர்களுக்கு கூட இந்த டிக் கிடைப்பது கிடையாது. இந்த நிலையில் ட்விட்டரில் புளூடிக் கணக்கு வைத்திருப்பவர்கள் 8 டாலர் செலுத்த வேண்டும். எட்டு டாலர் என்பது இந்திய ரூபாய் கணக்கில் 640 ரூபாய். இந்தியாவில் பல பிரபலங்கள் இந்த ப்ளூ டிக் கணக்கை வைத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே மாதம் 640 கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது எலான் மஸ்க் போட்ட டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

சிபிராஜ் டீவ்ட்:

இந்த நிலையில் இந்த வீட்டுக்கு நடிகர் சிபிராஜ் பதில் டீவ்ட் இருக்கிறார். அதில் அவர், உங்களுடைய கூகுள் பே நம்பரை அனுப்புங்கள் என்று எலான் மஸ்க்கை கிண்டல் செய்யும் விதமாக டீவ்ட் போட்டு இருக்கிறார். சிபிராஜூம் ட்விட்டரில் ப்ளூடிக் கணக்கு வைத்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரை உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் சிபிராஜ். இவர் நடிகர் சத்யராஜின் மகன் ஆவார். மேலும், சிபிராஜ் ஸ்டூடன்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார்.

சிபிராஜ் திரைப்பயணம்:

அதன் பின்னர் இவர் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், எந்த படமும் இவருக்கு கைகொடுக்கவில்லை. அதிலும் இவர் தன் தந்தை சத்யராஜுடன் இணைந்து பல படங்களில் மாஸ் காட்டி இருக்கிறார். ஆனாலும், இவர் தந்தை இடத்தை சினிமாவில் பிடிக்க முடியவில்லை. தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

Advertisement