ஆடியோ லான்ச்னா இப்படி இருக்கனும் – அனிருத் வீடியோவை பகிர்ந்து சித் ஸ்ரீராமை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.

0
1678
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகராக திகழ்ந்துவருபவர் பாடகர் சித் ஸ்ரீராம். சென்னையில் பிறந்த இவர், 1991ஆம் ஆண்டு குடும்பத்துடன் கலிபோர்னியாவின் பே ஏரியாவில் குடியேறினார். தன்னுடைய 3ஆவது வயதில் தாயிடம் கர்நாடக இசையை சிறுது சிறிதாக கற்க ஆரம்பித்து, பின்பு 2001ஆம் ஆண்டு தன்னுடைய 11 வயதில் முழு முயற்சியுடன் கர்நாடக இசை கற்க துவங்கினார். 2010 ஆண்டு சொந்தமாக இசை எழுதி இயக்கி அதை youtube மூலமாக வெளியிட்டு வந்தார். கல்லூரிக்கு பிறகு சென்னைக்கு வருவதையும் மார்கழி மாத உற்சவத்தில் பங்கேற்பதையும் வழக்கமாக்கி கொண்டார்.

-விளம்பரம்-

இவருக்கும் சினிமாவில் பாடும் வாய்ப்பு கொடுத்தது இசைப்புயல் தான். மணிரத்னம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக அறிமுகமான ‘அடியே அடியே பாடல் தான்’ இவரது முதல் பாடல். அந்த பாடலுக்கு பின் இவர் எண்ணெற்ற பாடல்களை பாடி இருக்கிறார் அது அனைத்துமே படு ஹிட் தான். தமிழ் மட்டுமல்லாது தெலுகு, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் பாடி வருகிறார்.

- Advertisement -

இவர் தமிழில் பாடிய பல பாடல்கள் பலரின் Playlistஆக இருந்து வருகிறது. சினிமாவில் பாடுவதுமட்டுமல்லாமல் அது மட்டுமல்லாமல் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார் சித். அதுவும் இவர் மேடையில் பாடும் போது மட்டும் தனக்கே உரிய ஸ்டைலில் பாடலை கொஞ்சம் அனுபவித்து படுவது அடிக்கடி Trollகளுக்கு உள்ளாகிவிடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர் மேடையில் பாடிய தள்ளிப்போகாதே பாடலும் Trollகளுக்கு உள்ளாகி இருக்கிறது.

ஏற்கனவே சித் ஸ்ரீராம் பாடிய கர்ணன் பாட்டு இனைய வாசிகளால் படும் கேலிக்கு உள்ளாகி இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு இசை விழாவில் ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்ற ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலை தன்னுடைய ஸ்டைலில் பாடி இருந்தார். அந்த வீடியோவை கூட நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து சித் ஸ்ரீராமை Troll மெட்டீரியலாக மாற்றி இருந்தனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற குஷி படத்தின் இசை நிகழ்ச்சியில் சித் செய்துள்ள சித்து விளையாட்டால் மீண்டும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறார் சித். விஐய் தேவர்கொண்டா சமந்தா நடித்துள்ள படம் ‘குஷி’ ரொமான்டிக் காதல் ஸ்டோரியாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இசை நிகழ்ச்சி ஒன்றில் சித் செய்துள்ள செயல் பெரும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்த நிகிழ்ச்சியில் மேடையில் பாடிய சித் ஸ்ரீராம் ரசிகர்களை பார்த்து ஹ்ம்ம், ஊ, ஏ என்று கண்ட மேனிக்கு கத்திக்கொண்டு இருந்தார். அவர் அப்படி கத்த கத்த, அரங்கில் இருந்த ரசிகர்களும் கத்தினர். இந்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரலாக பரவி வர ‘இது ஆடியோ லாஞ்சா இல்ல பைத்தியக்கார ஆஸ்பத்திரியா’ என்று பலரும் கேலி செய்து வருகின்றனர். மேலும், சமீபத்தில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் அனிருத் பாடிய வீடியோவை பகிர்ந்து ஆடியோ லாஞ்ச்னா இப்படி இருக்கனும் என்று கூறி வருகின்றனர்.

ஏற்கனவே தன்னுடைய Live Performance-ஐ கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சித் ஸ்ரீராம் ‘நானும் என் குழுவினரும் ரசிகர்களுக்காகவே செயல்படுகிறோம், நீங்கள் அனைவரும் குடும்பம் போன்றவர்கள். காசு கொடுத்து, டிராஃபிக்கில் அமர்ந்து, மழையில் நின்று, அன்பில் பங்குகொள்ள வரும் மக்களுக்காக இதைச் செய்கிறோம். இணையத்திற்காக வாழும் மக்களுக்காக நாங்கள் அதைச் செய்ய மாட்டோம்’ என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement