‘கர்ணன் பாட்ட இப்படியா பாடுவீங்க’ சித் ஸ்ரீராமை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள். இத கொஞ்சம் கேளுங்க.

0
664
sid
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகராக திகழ்ந்துவருபவர் பாடகர் சித் ஸ்ரீராம். சென்னையில் பிறந்த இவர், 1991ஆம் ஆண்டு குடும்பத்துடன் கலிபோர்னியாவின் பே ஏரியாவில் குடியேறினார். தன்னுடைய 3ஆவது வயதில் தாயிடம் கர்நாடக இசையை சிறுது சிறிதாக கற்க ஆரம்பித்து, பின்பு 2001ஆம் ஆண்டு தன்னுடைய 11 வயதில் முழு முயற்சியுடன் கர்நாடக இசை கற்க துவங்கினார். 2010 ஆண்டு சொந்தமாக இசை எழுதி இயக்கி அதை youtube மூலமாக வெளியிட்டு வந்தார். கல்லூரிக்கு பிறகு சென்னைக்கு வருவதையும் மார்கழி மாத உற்சவத்தில் பங்கேற்பதையும் வழக்கமாக்கி கொண்டார்.

-விளம்பரம்-

இவருக்கும் சினிமாவில் பாடும் வாய்ப்பு கொடுத்தது இசைப்புயல் தான். மணிரத்னம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக அறிமுகமான ‘அடியே அடியே பாடல் தான்’ இவரது முதல் பாடல். அந்த பாடலுக்கு பின் இவர் எண்ணெற்ற பாடல்களை பாடி இருக்கிறார் அது அனைத்துமே படு ஹிட் தான். தமிழ் மட்டுமல்லாது தெலுகு, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் பாடி வருகிறார்.

- Advertisement -

சித்தின் கர்ணன் பாடல் :

இவர் தமிழில் பாடிய பல பாடல்கள் பலரின் Playlistஆக இருந்து வருகிறது. சினிமாவில் பாடுவதுமட்டுமல்லாமல் அது மட்டுமல்லாமல் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடி வரும் சித், சமீபத்தில் நடைபெற்ற ஒரு இசை விழாவில் ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்ற ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலை தன்னுடைய ஸ்டைலில் பாடி நெட்டிசன்கள் கேலிக்கு உள்ளாகி இருக்கிறார் சித்.

கர்ணனுக்கு வந்த சோதனை :

தமிழ் சினிமாவில் எத்தனையோ வரலாற்று கதைகள் வந்து இருக்கிறது. அதிலும் அந்த காலத்து படங்களில் இதிகாசகதைகளை மையமாக கொண்டு பல படங்கள் வந்து இருக்கிறது. அந்த வகையில் மகாபாரதத்தில் வரும் கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு வந்த படம் ‘கர்ணன்’. சிவாஜி கணேசன் இந்த படத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

‘சீர்காழி பாடலை சீரழித்த சித்’ :

இந்த படத்தில் இறுதி காட்சியில் கர்ணன் கதாபாத்திரம் போரில் இறக்கும் தருவாயில் இருக்கும் போது அவரிடம் கண்ணன் படுவது போல இடம்பெற்ற ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ இன்றளவும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த பாடல் என்று தான் சொல்ல வேண்டும். இந்த பாடலை பழம் பெரும் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் தனது அற்புதமான குரலில் பாடி இருப்பார்.

பாடலை கெடுக்க வேண்டாம் ;

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இந்த பாடலை தன்னுடைய ஸ்டைலில் பாடி இருந்த சித் ஸ்ரீ ராமின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் சித் ஸ்ரீராமை கண்ட மேனிக்கு கேலி செய்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற அற்புதமான பாடலில் மசாலா கலக்கிறேன் என்று அந்த பாடலை கெடுத்துவிட வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.

Advertisement