சித் ஸ்ரீராம் முதல் ஸ்ரேயா கோஷல் வரை – ஒரு பாடலுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குறாங்க தெரியுமா ?

0
384
sid
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள பின்னணி பாடகர்– பாடகிகளின் அதிக சம்பளம் வாங்கும் பட்டியல் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியிருக்கிறது. பொதுவாகவே சினிமா உலகில் படங்கள் மிகப் பெரிய ஹிட்டாகுவதற்கு நடிகர், நடிகைகளுக்கு இணையாக படத்தின் பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதோடு நடிகர், நடிகைகள் மிகப்பெரிய பிரபலமாவதற்கு பாடல்களும் ஒரு முக்கிய பங்கு என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் பின்னணி பாடகர்– பாடகிகள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகம் சம்பளம் வாங்கும் பாடகர்–பாடகிகளின் பட்டியலில் தற்போது வெளிவந்துள்ளது. சினிமா உலகில் பாடகர்கள் ஒரு பாட்டுக்கு ரூ.4 லட்சம் சம்பளம் வாங்குக்கிரார்கள். அதில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் என்ற பெருமையை சில வருடங்களாகவே சித்ஸ்ரீராம் தட்டி சென்றிருக்கிறார்.

- Advertisement -

அதிகம் இவருடைய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்து வருகிறது. பின் பாடகிகளில் அதிக சம்பளம் வாங்குவது ஸ்ரேயா கோஷல். ஒரு பாட்டுக்கு மூன்று லட்சத்தில் இருந்து 3.5 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார். இவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். இவர் 16 வயதிலிருந்து ஹிந்தி படங்களில் பாடிக் கொண்டு வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், அசாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி போன்ற பல்வேறு மொழிகளில் பாடி வருகிறார்.

அதிலும் குறிப்பாக தமிழில் இவர் பாடிய சில்லுனு ஒரு காதல் படத்தில் இருந்து இடம்பெற்ற முன்பே வா, வெயில் படத்தில் இடம்பெற்ற உருகுதே மருகுதே, அந்நியன் படத்தில் இடம்பெற்ற அண்டங்காக்கா கொண்டக்காரி, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம்பெற்ற மன்னிப்பாயா போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றும் வரவேற்கப்படுகிறது. மேலும், இவருக்கு அடுத்ததாக அதிக சம்பளம் வாங்கும் பாடகியாக சாதனா சர்கம் இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் ஒரு பாடலுக்கு ரெண்டு லட்சம் வாங்குகிறார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில் தாபோல் துறைமுகம் நகரத்தில் பிறந்தவர். இவர் இசை குடும்பத்தை சேர்ந்தவர். மேலும், இவர் தமிழ், ஹிந்தி, குஜராத்தி, வங்காளம், பஞ்சாபி, நேபாளம் உட்பட மொத்தம் இருபத்தைந்து மொழிகளில் பாடி இருக்கிறார். தற்போது இந்த பட்டியல் ரசிகர்கள் மத்தியில் அதிக வைரலாகி வருகிறது.

Advertisement