புழல் சிறையில் பலரை கொரோனாவில் இருந்து குணமாக்கினேன் – ஜாமினில் வந்த சித்த மருத்துவர் மீண்டும் சர்ச்சை.

0
1660
sidha
- Advertisement -

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக வதந்தி பரப்பிய, போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம், குண்டர் தடுப்பு சட்டத்தில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்தன சித்த மருத்துவமனையை நடத்தி வந்தவர் சித்த வைத்தியர் தணிகாசலம் இவர் கடந்த ஆண்டு கருணாவிற்கு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் போராடிக் கொண்டிருக்கையில் ஒரு நாட்டு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும் அதனை அப்போதைய தமிழக முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி அனுப்பிய இருவருக்கு சிகிச்சை அளித்து நோயை குணப்படுத்தி விட்டதாகவும் இவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

-விளம்பரம்-

இதைத்தொடர்ந்து தமிழக முதல்வருக்கு எதிராகவும் உலக சுகாதார நிறுவனத்திற்கு எதிராகவும் சமூகவலைதளத்தில் தவறான தகவலை பரப்ப தணிகாசலம் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர் இதையடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு காலம் சிறை தண்டனை அனுபவிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார் இருப்பினும் அவர் கடந்த 7 மாதமாக புழல்சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் 7 மாதத்திற்கு பின்னர் மீண்டும் வெளியில் வந்துள்ள தணிகாசலம், கொரோனா தொற்றுக்கு மீண்டும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக சர்ச்சையை கிளப்பியுள்ளார். தான் சிறையில் இருந்த போது தான் கண்டுபிடித்த மருந்தை பயன்படுத்தி பலரை கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளதாக கூறியுள்ளார். மேலும், கடந்த ஜனவரி மாதம் முதல் தன்னிடம் சிகிச்சை பெற்ற பலர் குணமடைந்து வருதாகவும் பதிவிட்டு வருகிறார்.

அதே போல தன்னிடம் சிகிச்சை பெற்று கொரோனாவில் இருந்து மீண்ட பலரின் வீடியோக்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதே போல இந்த இரண்டாம் கொரோனா அலையில் இருந்து தப்பிக்க சில மருத்துவ டிப்ஸ்களையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார் தணிகாசலாம். ஏற்கனேவே இது போன்ற வீடியோகளை பதிவிட்டதால் தான் குண்டர் சட்டத்தில் கைதாகி பின்னர் ஜாமினில் வெளியில் வந்த நிலையில் தற்போது மீண்டும் இவர் கொரோனா சிகிச்சை பற்றி வீடியோக்களை பதிவிட்டு உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement