தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. சமீப காலமாகவே சித்தார்த் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சித்தார்த் நடிப்பில் வெளியாகி இருந்த சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

இந்த படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பல நடித்திருந்தார்கள். இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் எழுதி இயக்கி இருந்தார். இதை அடுத்து கமல் நடிப்பில் வெளியான ‘இந்தியன் 2’ படத்தில் சித்தார்த் நடித்து இருந்தார். இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை மீண்டும் இயக்குனர் சங்கர்- கமல் எடுத்தார்கள். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது.
சித்தார்த் திரைப்பயணம்:
இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, ஜெகன், பாபி சிம்ஹா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்தப் படத்திற்கு அனிருத் இசைஅமைத்திருந்தார். மேலும், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. சங்கர் திரைப்பயணதிலேயே இந்த படம் பெரும் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த படம் மிஸ் யூ.

சித்தார்த் பேட்டி:
இந்த படத்தை இயக்குனர் ராஜசேகர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சித்தார்த்துடன் ஆஷிகா ரங்கநாத், பாலசரவணன், கருணாகரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் ஹைதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினராக சித்தார்த் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர்,
நான் சில படங்களுக்கு ஓகே சொல்லி இருந்தால் பெரிய ஸ்டாராக மாறி இருப்பேன்.
சினிமா அனுபவம்:
பெண்களை அறைவது, ஐட்டம் பாடல்களை படத்தில் வைப்பது, தொப்புள்களை கிள்ளுவது, ஒரு பெண் என்ன செய்ய வேண்டும், எங்கு சொல்ல வேண்டும் என்பது தொடர்பான பல கதைகள் என்னிடம் வந்தது. அவற்றில் சிறந்த கதை, சிறந்த முறையில் எடுக்கப்பட்டிருந்தால் அவை படங்களாக மாறி இருக்கும். ஆனால், நான் அதை எல்லாம் நிராகரித்து விட்டேன். நான் வித்தியாசமாக இருந்திருந்தால் நான் பெரிய நட்சத்திரமாக மாறியிருப்பேன். நான் இயல்பாக எனக்கு பிடித்ததை செய்தேன்.

படங்களை நிராகரித்த காரணம்:
நீங்கள் பெண்களை மதித்தீர்கள், பெற்றோர்களிடம் நல்லவராக இருந்தீர்கள், குழந்தைகளுடன் நன்றாக இருந்தீர்கள், நீங்கள் அழகாக இருந்தீர்கள் என்று மக்கள் என்னிடம் சொல்லும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அவர்களுடைய குழந்தைகள் 15 வருடங்களுக்கு முன்பு வெளியான என்னுடைய படங்களை பார்க்கிறார்கள். இது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. கோடிகளில் அளவிட முடியாத ஒன்று. என்னை சுற்றியுள்ள அனைவரும் ஆக்ரோஷமாகவும், ஆண்மையுடனும் இருக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஆண்களின் வலிமையை உணராத வகையை சார்ந்தவர்கள். நான் திரையில் அழுவதை மகிழ்ச்சியாக பார்க்கிறேன் என்று கூறியிருந்தார்.






