சித்தார்த் மாஸ் ஹீரோவாக அசத்தியுள்ள ‘அருவம்’ படத்தின் டீஸர் இதோ.!

0
695
Aruvam

சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். பாய்ஸ் படத்திற்கு பின்னர் தமிழில் ஆயுத எழுத்து, ஜில் ஜங் ஜக் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகராக வளம் வர முடியவில்லை என்றாலும் தெலுங்கில் இவர் பேர் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார். தமிழில் இறுதியாக அவள் என்ற திகில் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது அருவம் என்ற படத்தில் நடித்துள்ளார். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரனிடம் தயாரித்துள்ள “அருவம்” திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமானதிரைப்படமாக கருதப்படுகிறது. சித்தார்த் மற்றும் கேத்ரின் தெரசா ஆகியோர் நடிக்க, சாய் சேகர் இயக்கியிருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் புத்தாண்டுக்கு வெளியாகி இருந்தது.

- Advertisement -


தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் சித்தார்த், கேத்ரின் தெரசா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க கபிர் துகன் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா மற்றும் போஸ்டர் நந்தகுமார் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல், மயில்சாமி இன்னும் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு எஸ்.எஸ். தமன் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது வென்ற பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்ய, ஜி துரைராஜ் கலை இயக்குனராக பணிபுரிகிறார். ஸ்டண்ட் சில்வா வில்லனாக நடிப்பதோடு, படத்தின் சண்டைப்பயிற்சியாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தின் டீசரை வைத்து பார்க்கும் போது இந்த படத்தில் திகில் மற்றும் திரில்லர் காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. கிட்டத்தட்ட ஆதி நடிப்பில் வெளியான ஈரம் படம் போன்று இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement