தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே நீட் தேர்வுக்கு எதிராக பலர் குரல் குடுத்து வருகின்றனர். நீட் தேர்வு என்று சொன்னதும் தமிழக மக்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது மாணவி அனிதாவின் தற்கொலை தான். நீட் தேர்வால் மருத்துவ சீட்டு கிடைக்காமல் அனிதா துவங்கி கடந்த ஆண்டு வரை பல மாணவர்கள் தற்கொலை செய்து இருக்கின்றனர்.சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற 20 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மாணவன் தனுஷ், கடந்த 2 ஆண்டுகளுக்கு தனது 12 ஆம் வகுப்பை முடித்துவிட்டு மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்விற்கு தயாராகி வந்திருக்கிறார். இதுவரை இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில் மூன்றாம் தேர்வை எழுத படித்து வந்த தனுஷ், தேர்வு நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இப்படி ஒரு நிலையில் ட்விட்டர் வாசி ஒருவர், ட்விட்டர் பக்கத்தில் ‘நீட் தேர்வை முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ரத்து செய்வோம் – தேர்தல் வாக்குறுதி. இன்று நீட் நடக்கிறது. பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் – சித்தார்த். ஐயா சித்தார்த் என்ன பண்ண போறீங்க ? நீட் ரத்து எங்கடா என்று கமன்ட் செய்து இருந்தார்.
இதற்கு பதில் அளித்த சித்தார்த் ‘மூதேவி கோபமோ சந்தேகமோ வந்தா இருந்தா போய் நீ கேளு இல்ல உங்க அப்பன போய் கேளு நான் என் வேலைய தான் பாக்குறேன் பொறுக்கி பசங்க இதுவே வேலையா போச்சு ட்விட்டர் கழிவறையை ஆக்கி வச்சிருக்காங்க வேற எங்க மலரும் சாக்கடையில் தான் மலரும் எழவு ஹிந்தில சொல்லட்டா’ என்று மிகவும் கடுப்பாக பதிலளித்திருக்கிறார்.
சித்தார்த்தின் இந்த பதிலுக்கு பலரும் வரவேற்பும் எதிர் கருத்துக்களும் கூறி வரும் நிலையில் திரௌபதி இயக்குனர் மோகன் தன் பங்கிற்கு ” என்று பதிவிட்டு சித்தார்த்தை வம்பிழுத்து உள்ளார். ஆனால், மோகனின் ‘நான் என் வேலைய தான்டா பாக்குறேன்’ என்று கமன்ட் போட்டுள்ளார். இந்த பதிவிற்கு நடிகர் சித்தார்த் எந்த ஒரு பதிலும் கூறவில்லை.